3400. |
வேத மலிந்தவொலி விழ வின்னொலி |
|
வீணையொலி
கீத மலிந்துடனே கிள ரத்திகழ்
பௌவமறை
ஓத மலிந்துயர்வான் முக டேறவொண்
மால்வரையான்
பேதையொ டும்மிருந்தான் பிர மாபுரம்
பேணுமினே. 7 |
3401. |
இமையவ ரஞ்சியோட வெதிர் வாரவர் |
|
தம்மையின்றி
அமைதரு வல்லரக்கன் னடர்த் தும்மலை
யன்றெடுப்பக்
குமையது செய்துபாடக் கொற்ற வாளொடு
நாள்கொடுத்திட்
டுமையொ டிருந்தபிரான் பிர மாபுர
முன்னுமினே. 8 |
7.
பொ-ரை: வேதங்களை ஓதுகின்ற ஒலி, வீணையின் இன்னொலி,
கீதஒலி இவை ஒருசேர எழுந்த கடல்ஓசையை அடக்குமாறு, வானத்தின்
உச்சியை அடைவதாய் உள்ள, ஒளி பொருந்திய பெரிய கயிலை
மலையானாகிய சிவபெருமான் உமாதேவியோடு வீற்றிருந்தருளும்
திருப்பிரமாபுரம் என்னும் திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள்.
கு-ரை:
வேதஒலி முதலிய ஒலிகள் மிக, அவை. பௌவம் - கடல்
ஒலியையும். மறை - மறைக்கவல்ல, ஓதம் மலிந்து - ஓசையாகப் பெருகி.
வான்முகடு ஏற - ஆகாயத்தின் உச்சியை அடைய, ஒள் பிரமாபுரம் -
அழகாகிய பிரமாபுரம். மால்வரையான்பேதை - மலைமகள்.
8.
பொ-ரை: தேவர்கள் அஞ்சியோடத் தன்னை எதிர்ப்பவர்
யாருமில்லாது அமைந்த வல்லசுரனாகிய இராவணன் பண்டைக் காலத்தில்
கயிலையைப் பெயர்த்து எடுக்க, சிவபெருமான் தன் காற்பெருவிரலை
ஊன்றி அவன் அம்மலைக்கீழ் நசுங்கும்படி துன்பம் செய்து, பின் அவன்
தவறுணர்ந்து சாமகானம் பாடித் துதிக்க, அவனுக்கு வெற்றிதரும் வாளொடு,
நீண்ட வாழ்நாளும் கொடுத்து
|