பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)57. திருஒற்றியூர்779

3409. விலகினார் வெய்யபாவம் விதி யாலருள்
       செய்துநல்ல
பலகினார் மொந்தைதாளந் தகுணிச்சமும்
     பாணியாலே
அலகினால் வீசிநீர்கொண் டடி மேலல
     ரிட்டுமுட்டா
துலகினா ரேத்தநின்றா னுறை யும்மிட
     மொற்றியூரே.                       5

3410. கமையொடு நின்றசீரான் கழ லுஞ்சிலம்
       புமொலிப்பச்
சுமையொடு மேலும்வைத்தான் விரி கொன்றையுஞ்
     சோமனையும்


என்ற அப்பர் வாக்கிலும் (திருமுறை 6) இத்தொடர் பயில்கிறது. உரவுநீர்
- உலாவும் நீர் (சீவகசிந்தாமணி) - கங்கை. ஏற்ற - தாங்கிய. பெம்மான்
-பெருமான்.

     5. பொ-ரை: கொடிய பாவத்திலிருந்து விடுபட்ட பக்குவ
ஆன்மாக்கட்கு, விதிப்படி அருள்செய்து, சிவபெருமான் நல்ல பல
வகையான வாத்தியங்களான மொந்தை, தாளம், தகுணிச்சம் என்னும்
ஒருவகை தோற்கருவி முதலியன ஒலிக்கப் பாட்டோடும், தாளத்தோடும்
எண்தோள் வீசி நின்று ஆட, உலகத்தோர் அவன் திருவடியில்
மலர்களைத் தூவி, தங்கள் வழிபாடு தடைப்படா வண்ணம் துதித்து
வணங்க அவன் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: வெய்யபாவம் விலகினார் - கொடிய பாவம்நீங்கிய
பக்குவிகளுக்கு. விதியால் - விதிப்படி. அருள் செய்து - தீக்கை முதலிய
செய்வித்து. பாணியால் - பாட்டோடும், அலகினால் - தாளத்தோடும்.
வீசி - (எண்தோள்) வீசிநின்று ஆடி, உலகினார் நீர் கொண்டு (ஆட்டி)
அடிமேல் அலர் இட்டு. முட்டாது ஏத்த - தங்கள் வழிபாடு
தடைப்படாவண்ணம் துதித்து வணங்க, நின்றான் - அருள்செய்து, வீசி,
ஏத்தநின்றான் என முடிவு கொள்க.

     6. பொ-ரை: பொறுமையுடன் விளங்கும் தலைவனான சிவபெருமான்,
தன் திருவடிகளிலுள்ள கழலும், சிலம்பும் ஒலிக்கச்