பக்கம் எண் :

780திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

  அமையொடு நீண்டதிண்டோ ளழ காயபொற்      றோடிலங்க
உமையொடுங் கூடிநின்றா னுறை யும்மிட
     மொற்றியூரே.                       6

3411. நன்றியால் வாழ்வதுள்ளம் முல குக்கொடு
       நன்மையாலே
கன்றனார் மும்மதிலுங் கரு மால்வரை
     யோசிலையாப்
பொன்றினார் வார் சுடலைப் பொடி நீறணிந்
     தாரழலம்
பொன்றினா லெய்தபெம்மா னுறை யும்மிட
     மொற்றியூரே.                       7


சடைமுடியில் மலர்ந்த கொன்றையையும், சந்திரனையும் தாங்கிய, நீண்ட
வலிமையான தோளழகு உடையவன். காதில் பொன்னாலாகிய தோடு
பிரகாசிக்க உமாதேவியோடு சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது
திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும்.

     கு-ரை: கமை - பொறுமை. கழலும் சிலம்பும் ஒலிப்ப என்றது -
உமையொரு கூறன் என்பது உணர்த்தியது. சுமையொடு - சுமையாக. ஒடு
- இசைநிறை. அமையொடு - அழகின் அமைதியோடு, நீண்ட திண்ணிய
தோளின் மீது, பொன்மயமான காதணி, இலங்க - பிரகாசிக்க.

     7. பொ-ரை: உள்ளத்தில் பிறருக்கு உபகாரமாய் வாழவேண்டும்
என்பதை உலகிற்கு உணர்த்தச் சிவபெருமான், உலகத்தார்க்கு தீமை
செய்த அசுரர்கள் வாழும் முப்புரங்களையும், பெருமை வாய்ந்த
மேருமலையை வில்லாகக் கொண்டு அக்கினிக்கணை ஒன்றை எய்து
அழித்தவர். நெடிய சுடலைப்பொடியாகிய நீற்றிணை அணிந்தவர்.
அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: உள்ளம் - உள்ளத்தில். நன்றியால் - பிறருக்கு உபகாரம்
ஆம் தன்மையோடு. வாழ்வது - வாழவேண்டுமென்பதை, உலகுக்கு -
உலகத்துக்கு. ஒரு நன்மையாலே - நல்லது என்னும் நோக்கத்தினால்.
உலகுக்குத் தீமை செய்த திரிபுரங்களை அழித்தார் என்றது இடை