பக்கம் எண் :

786திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

  தானலங் கொண்டுமேகந் தவ ழும்பொழிற்
     சாத்தமங்கை
ஆனலந் தோய்ந்தவெம்மா னயவந்தி
     யமர்ந்தவனே.                     3

3419. மற்றவின் மால்வரையா மதி லெய்துவெண்
       ணீறுபூசிப்
புற்றர வல்குலாளோ டுட னாவதும்
     பொற்பதுவே
கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழச்
     செய்தபாவம்
அற்றவர் நாளுமேத்த வய வந்தி
     யமர்ந்தவனே.                     4


மருண்ட பார்வையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவன்
சிவபெருமான். மேகத்தைத் தொடும்படி உயர்ந்த அழகிய சோலைகள் சூழ்ந்த
திருச்சாத்த மங்கை என்னும் திருத்தலத்தில் பசுவிலிருந்து பெறப்படும்
பஞ்சகவ்வியங்களால் திருமுழுக் காட்டப்படும் சிவபெருமான் திருஅயவந்தி
என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான்.

     கு-ரை: நூல் நலம் - நல்லபுரி நூல். நுகர் - பூசிய நீறு. மாண்பு
அதுவே - பெருமையாமா? நோக்கி - கண்களையுடையவள். ஆன்நலம் -
பசுவினிடம் கிடைக்கும் பஞ்சகவ்வியத்தை. தோய்ந்த - திருமஞ்சனம்
கொண்டருளிய. எம்மான் - எமது தலைவனே.

     4. பொ-ரை: பெரிய மேருமலையை வில்லாகக் கொண்டு
மும்மதில்களை எய்து அழித்து, திருவெண்ணீற்றினைப் பூசி, புற்றில்
வாழ்கின்ற பாம்பு போன்ற அல்குலையுடைய உமாதேவியை உடனாகக்
கொண்டு விளங்குகிறான் சிவபெருமான். வேதகாமங்களை நன்கு
கற்றவர்கள் வாழ்கின்ற திருச்சாத்தமங்கை என்னும் திருத்தலத்தைக்
கைக்கூப்பித் தொழப் பாவம் நீங்கும். உலகப் பற்றற்ற மெய்யடியார்கள்,
தமக்குப் பற்றுக் கோடாக விளங்கும் சிவ பெருமானை நாள்தோறும்
போற்றி வழிபட திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் அவன்
வீற்றிருந்தருளுகின்றான்.