பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)58. திருச்சாத்தமங்கை787

3420. வெந்தவெண் ணீறுபூசி விடை யேறிய
       வேதகீதன்
பந்தண வும்விரலா ளுட னாவதும்
     பாங்கதுவே
சந்தமா றங்கம்வேதந் தரித் தார்தொழுஞ்
     சாத்தமங்கை
அந்தமா யாதியாகி யய வந்தி
     யமர்ந்தவனே.                      5

3421. வேதமாய் வேள்வியாகி விளங் கும்பொருள்
       வீடதாகிச்
சோதியாய் மங்கைபாகந் நிலை தான்சொல்ல
     லாவதொன்றே


     கு-ரை: மற்ற - (எதிரிகள் வில்லுக்கு) எதிராகிய வில் மால் வரையா(க)
பெரிய (மேரு) மலையாக. பொற்பதுவே - அழகு உடையதா?. கற்றவர்
சாத்தமங்கை - கற்றவர் வாழும் திருச்சாத்த மங்கையில். அற்றவர் - பற்றற்ற
மெய்யடியார் “அற்றவர்க் கற்ற சிவனுறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே”
என்புழியும் (தி.3.ப.120.பா.2.) காண்க.

     5. பொ-ரை: இறைவன் திருவெண்ணீற்றினைப் பூசியவன்.
இடபவாகனத்தில் ஏறியமர்பவன். வேதத்தை இசையோடு பாடியருளி,
வேதப் பொருளாகவும் விளங்குபவன். பந்து வந்தணைகின்ற விரல்களை
யுடைய உமாதேவியை உடனாகக் கொண்டவன். வேதமும், அதன்
ஆறங்கமும் ஓதுகின்ற அந்தணர்கள் தொழுகின்ற திருச்சாத்தமங்கை
என்னும் திருத்தலத்தில் உலகத்திற்கு அந்தமும், ஆதியுமாகிய
சிவபெருமான் திருஅயவந்தி என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான்.

     கு-ரை: வேதகீதன் - வேதத்தை இசையோடு பாடுபவன். சந்தம் -
அழகிய. ஆறு அங்கம் - ஆறு அங்கங்களையும். வேதம் - வேதத்தையும்.
தரித்தார் - உச்சரிப்பவர்களாகிய அந்தணர்கள். “உன் திருநாமம் தரிப்பார்”
(திருவாசகம் - கோயிலின் மூத்த. 9) என்பதும் காண்க.

     6. பொ-ரை: இறைவன் வேதங்களை அருளி வேதப் பொருளாகவும்
விளங்குபவன். எரியோம்பிச் செய்யப்படும் வேத