பக்கம் எண் :

792திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

59. திருக்குடமூக்கு

பதிக வரலாறு:

     பூந்தராய் வள்ளலார், திருக்குடமூக்குச் செல்ல மறையோர்,
மறையொலி முழக்கமும் மங்கல தூரிய முழக்கமும் பெருக எதிர்கொண்டு,
போற்றிக் கொண்டு செல்ல, அத்தலத்தை அடைந்து, ‘குடமூக்கை
உவந்திருந்த பெருமான் எம் இறை’ என்று, பெருகும் இசையால் பாடி
யருளிய வண்டமிழின் திருப்பதிகம் இது.

பண்: பஞ்சமம்

ப.தொ.எண்:317   பதிக எண்: 59

திருச்சிற்றம்பலம்

3427. அரவிரி கோடனீட லணி காவிரி
       யாற்றயலே
மரவிரி போதுமௌவன் மண மல்லிகை
      கள்ளவிழும்
குரவிரி சோலைசூழ்ந்த சூழ கன்குட
     மூக்கிடமா
இரவிரி திங்கள்சூடி யிருந் தானவ
     னெம்மிறையே.                       1


     1. பொ-ரை: பாம்பைப் போலும் தண்டோடு மலர் விரிந்த காந்தட்
செடிகள் செழித்திருத்தலால், அழகிய காவிரியாற்றின் பக்கம், மராமரங்கள்
விரிந்த மலர்களும், முல்லையும், மணம் வீசும் மல்லிகையும், தேனோடு
முறுக்கு உடையும் மலர்களைஉடைய குராமரங்களும் விரிந்த சோலை சூழ்ந்த
கும்பகோணத்தினை இடமாகக் கொண்டு குழகனாகிய சிவபெருமான், இரவில்
ஒளிரும் சந்திரனைச் சூடி வீற்றிருக்கிறான். அப்பெருமானே எம் இறைவன்.

     கு-ரை: அரவி கோடல்நீடல் - பாம்பைப்போலும், தண்டோடு மலர்
விரிந்த காந்தட் செடிகள் செழித்திருத்தலால், அணி - அழகு செய்கின்ற.
அயலே - காவிரியாற்றின் அருகில். மர - மராமரங்கள். விரி - விரிந்த.
போது - மலர்களும். மௌவல் - முல்லையும். மண மல்லிகை -
மணத்தையுடைய மல்லிகையும். கள் அவிழும் - தேனோடும்