பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)61. திருவெண்டுறை811

3454. ஊழிக ளாயுலகா யொரு வர்க்கு
       முணர்வரியான்
போழிள வெண்மதியும் புன லும்மணி
     புன்சடையான்
யாழின் மொழியுமையாள் வெரு வவ்வெழில்
     வெண்மருப்பின்
வேழ முரித்தபிரான் விரும் பும்மிடம்
     வெண்டுறையே.                 6

3455. கன்றிய காலனையும் முரு ளக்கனல்
       வாயலறிப்
பொன்றமு னின்றபிரான் பொடி யாடிய
     மேனியினான்


இயலும் - (வானில்) இயங்கிய, புரம் மூன்றுடன் - திரிபுரங்களுடன், பொன்
மலையே - மேருமலையே சிலையா (க). வீரியம் நின்று - தன்வீரியங்காட்டி
நின்று போர் செய்தான் என்க.

     6. பொ-ரை: சிவபெருமான் ஊழிக்காலங்கள்தோறும்
உலகப்பொருட்களுள் கலப்பால் ஒன்றாய் விளங்கினும், ஒருவர்க்கும்
உணர்வதற்கு அரியவனாய் விளங்குகின்றான். பிளவுபட்ட வெண்ணிறச்
சந்திரனையும், கங்கையையும் அணிந்த சடையுடையவன். யாழ் போன்று
இனிமையான மொழி பேசுகின்ற உமாதேவி அஞ்சும்படி அழகிய வெண்
தந்தமுடைய யானையின் தோலை உரித்தவன். அப்பெருமான் விரும்பி
வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: ஊழிகளாய் - ஊழிக்காலங்களாய். உலகமாகி நின்றும் -
ஒருவர்க்கும் உணர்வரியன். ஒரு நயம். “மரத்தில் மறைந்தது மாமதயானை.
பரத்தை மறைத்தது பார் முதற்பூதம்” (தி.10 பா.2256) என்று உவமை
முகத்தாற் கூறுவர் திருமூல நாயனார். போழ் - பிளவாகிய, வெண்மதி.
மருப்பின் வேழம் - கொம்பையுடைய யானை. யாழின் மொழி - இன் -
ஒப்புப் பொருளில் வந்தது.

     7. பொ-ரை: மார்க்கண்டேயரின் உயிரைக் கவரச் சினந்து வந்த
காலன் அலறி விழுமாறு காலால் உதைத்து அழித்தவன்.
திருவெண்ணீற்றினைத் திருமேனியில் பூசியவன். தேவர்களெல்லாம் சென்று