|
மடுத்தவ
னஞ்சமுதா மிக்க மாதவர்
வேள்வியைமுன்
தடுத்தவனூர் பனந்தாட் டிருத் தாடகை
யீச்சரமே. 3 |
3463. |
சூழ்தரு வல்வினையு முடல் தோன்றிய |
|
பல்பிணியும்
பாழ்பட வேண்டுதிரேன் மிக வேத்துமின்
பாய்புனலும்
போழிள வெண்மதியும் மனல் பொங்கரவும்
புனைந்த
தாழ்சடை யான்பனந்தாட் டிருத் தாடகை
யீச்சரமே. 4 |
அருளிச்செய்து அவ்வேதங்களின்
உட்பொருளாகவும் விளங்குபவன்.
பாற்கடலில் தோன்றிய நஞ்சை அமுதம்போல் உட்கொண்டவன். தன்னை
மதியாது தக்கன் செய்த வேள்வியைத் தகர்த்தவன். இத்தகைய சிவபெருமான்
வீற்றிருந்தருளும் உறைவிடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள,
திருத்தாடகையீச்சரம் என்னும்கோயிலாகும்.
கு-ரை:
உடுத்தவன் மான் உரித்தோல் - மானை உரித்த தோலை
உடையாக உடுத்தவன், மான் தோலும் இறைவனுக்கு உடை என்பதை
புள்ளியுழைமானின் தோலான் கண்டாய் என்ற அப்பர் வாக்காலும் அறிக.
கழல்கள் உள்க வல்லார் வினை - திருவடிகளை நினைப்பவரது
வினைகளைக் (கெடுத்து, அருள் செய்ய வல்லான்) கிளர் - மிக்கு
ஒலிக்கின்ற. கீதம் - கீதத்தினோடும். ஓர் நான்மறையான் - ஒரு நான்கு
வேதங்களையும் உடையவன். (நஞ்சு அமுதாகுமாறு) மடுத்தவன் -
உண்டவன். மாதவர் - தாருகவனத்து முனிவர்.
4.
பொ-ரை: பிறவிதோறும் உயிர்களைச் சூழ்ந்து வருகின்ற எளிதில்
நீங்காத வினைகளும், அவற்றின் காரணமாக உடலில் தோன்றும் பலவகை
நோய்களும் நீங்க வேண்டும் என்று எண்ணுவீராயின் பாய்கின்ற
கங்கையையும், பிளவுபட்ட இளமையான வெண்ணிறச் சந்திரனையும்,
நெருப்புப் போல் விடம் கக்கும் பாம்பையும் அணிந்த தாழ்ந்த
சடையினையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்பனந்தாள்
என்னும் திருத்தலத்திலுள்ள,
|