பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)63. திருச்செங்காட்டங்குடி823

63. திருச்செங்காட்டங்குடி

பதிக வரலாறு:

     திருச்செங்காட்டங்குடியில் சிறுத்தொண்டருடன் கூட எழுந்தருளிக்
கணபதீச்சரத்தில், போகம் எல்லாம் வெறுத்து, உண்டிப் பிச்சைநுகரும்
மெய்த்தொண்டர் சூழ வழிபட்ட வேதகீதர், “சிறப்பு உலவான்
சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய பிறப்பிலிபேர் பிதற்றிநின்று
இழக்கோ எம்பெருநலமே” என்று, அவர் தொழ, ஆண்டவன் இருந்த
தன்மையைப் போற்றிப் பாடியருளியது இத்திருப்பதிகம்.

பண்: பஞ்சமம்

ப.தொ.எண்:321   பதிக எண்: 63

திருச்சிற்றம்பலம்

3471. பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள்
       பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய்
     தந்தானே
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன்
     பணிசெய்ய
வெங்காட்டு ளனலேந்தி விளையாடும்
     பெருமானே.                         1


     1. பொ-ரை: பசுமையான கிளைகளில் மலர்களையுடைய
புன்னைமரத்தில் வீற்றிருக்கும் பறவைகளே! தலைவனான சிவபெருமான்
என்னைப் பிரிந்ததால் உடம்பு பசலைநிறம் பெற, ஆடி ஆடி உல்லாசமாக
இயங்கிய என் மகிழ்ச்சியை நீக்கி எனக்குத் தாங்காத துன்பம் தந்தான்.
அவன் திருச்செங்காட்டங்குடி என்னும் திருத்தலத்தில் சிறுத்தொண்டர்
பணி செய்ய சுடுகாட்டுள், கையில் அனல் ஏந்தி திருநடனம் புரியும்
பெருமானாவான்.

     கு-ரை: பைம்கோட்டு - பசிய கிளைகளில். மலர்ப்புன்னை -
மலர்களையுடைய புன்னை மரத்திலுள்ள (பறவைகாள்). பயப்பு -
பசப்பு, பசலைநிறம். ஊர - உடம்பிற்பரவ. சங்கு ஆட்டம் - சங்குப்