பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)64. திருப்பெருவேளூர்833

3484. இறைக்கொண்ட வளையாளோ டிருகூறா
       யொருகூறு
மறைக்கண்டத் திறைநாவர் மதிலெய்த
     சிலைவலவர்
கறைக்கொண்ட மிடறுடையர் கனல்கிளருஞ்
     சடைமுடிமேல்
பிறைக்கொண்ட பெருமானார் பெருவேளூர்
     பிரியாரே.                         4

3485. விழையாதார் விழைவார்போல் விகிர்தங்கள்
       பலபேசிக்
குழையாதார் குழைவார்போற் குணநல்ல
     பலகூறி


தம்மைப் போற்றுவார்கட்கும், மனத்தால் சிந்தித்துக் காயத்தால் தம்மை
வழிபடும் அடியவர்கட்கும் அருள்புரிபவர். வணங்கிப் போற்றாதவர் கட்கு
மாறுபாடாக விளங்குபவர். அப்பெருமான் திருப்பெருவேளூர் என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார்.

     கு-ரை: குணக்கு - கிழக்கு. குடபால் - மேற்குப் பக்கம். வட பால்
- வடக்குப் பக்கம். கணக்கு என்ன - ஒரு நிகராக. பிணக்கம் - மாறுபாடு.

     4. பொ-ரை: சிவபெருமான், முன்கையில் வளையலணிந்த உமாதேவி
ஒரு கூறாகவும், தாம் ஒரு கூறாகவும் இருகூறுடைய அர்த்தநாரியாய்
விளங்குபவர். வேதங்களை அருளிச் செய்த நாவுடையர். மும்மதில்களை
எய்த மேருமலையை வில்லாக உடையவர். நஞ்சை அடக்கியதால்
கறைகொண்ட கண்டத்தர். நெருப்புப்போல் மிளிரும் சிவந்த சடையில்
பிறையணிந்த பெருமானாகிய அவர் திருப்பெருவேளூர் என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார்.

     கு-ரை: இறை - முன்கை. கனல் கிளரும் - தீப்போற் பிரகாசிக்கும்.

     5. பொ-ரை: உலகப் பொருள்களில் பற்றுக் கொண்டு விழையாமல்
இறைவன்பால் விழைத்து பலவாறு போற்றி, உலகியலில்