|
அழையாவு
மரற்றாவு மடிவீழ்வார்
தமக்கென்றும்
பிழையாத பெருமானார் பெருவேளூர்
பிரியாரே. 5 |
3486. |
விரித்தார்நான் மறைப்பொருளை யுமையஞ்ச |
|
விறல்வேழம்
உரித்தாரா முரிபோர்த்து மதின்மூன்று
மொருகணையால்
எரித்தாரா மிமைப்பளவி லிமையோர்க
டொழுதிறைஞ்சப்
பெருத்தாரெம் பெருமானார் பெருவேளூர்
பிரியாரே. 6 |
மருள்கொண்டு குழையாது,
இறைவனின் திருவருளில் குழைந்து அவன்
புகழைப் பலவாறு எடுத்துக்கூறி, பெருமானே! அருள் புரிவீராக! என
அழைத்தும், அரற்றியும், அவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்குபவர்கட்கு
என்றும் தவறாது உடனே அருள்புரியும் சிவபெருமான் திருப்பெருவேளூர்
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார்.
கு-ரை:
விகிர்தம் - வேறுபாடு ஆனமொழி. அழையாவும் அரற்றாவும்
- அழைத்தல் ஆகவும், அரற்றுதல் ஆகவும்.
6.
பொ-ரை: சிவபெருமான் நான்மறைகளை விரித்துப் பொருள்
உரைத்தவர். உமாதேவி அஞ்சும்படி யானையின் தோலை உரித்துப்
போர்த்திக் கொண்டவர். மும்மதில்களையும் ஓர் அம்பினால் இமைக்கும்
அளவில் எரித்தவர். தேவர்கள் வணங்கிப் போற்ற விசுவரூபம் கொண்ட
எம்பெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்
பிரியநாதர் ஆவார்.
கு-ரை:
ஆம் - அசை. பெருத்தார் - விசுவரூபம் கொண்டு
அருளியவர்.
|