3487. |
மறப்பிலா வடிமைக்கண் மனம்வைப்பார் |
|
தமக்கெல்லாம்
சிறப்பிலார் மதிலெய்த சிலைவல்லா
ரொருகணையால்
இறப்பிலார் பிணியில்லார் தமக்கென்றும்
கேடிலார்
பிறப்பிலாப் பெருமானார் பெருவேளூர்
பிரியாரே. 7 |
3488. |
எரியார்வேற் கடற்றானை யிலங்கைக்கோன் |
|
றனைவீழ
முரியார்ந்த தடந்தோள்க ளடர்த்துகந்த
முதலாளர்
வரியார்வெஞ் சிலைபிடித்து மடவாளை
யொருபாகம்
பிரியாத பெருமானார் பெருவேளூர்
பிரியாரே. 8 |
7.
பொ-ரை: இறைவர் தம்மை மறவாது தமக்கு அடியவர்களாய்
விளங்குபவர்கள் மனத்தில் வீற்றிருப்பவர். சிறப்பில்லாத பகையசுரர்களின்
மும்மதில்களை மேருமலையை வில்லாகக் கொண்டு, அக்கினியைக்
கணையாக எய்து நெருப்புண்ணும்படி அழித்தவர். அவர் இறப்பற்றவர்.
நோயில்லாதவர். கேடு இல்லாதவர். பிறப்பில்லாத அப்பெருமான்
திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர்
ஆவார்.
கு-ரை:
மறப்பு இலா அடிமைக்கண் மனம் வைப்பார்.
8.
பொ-ரை: நெருப்புப் போல் சிவந்த வேற்படை உடைய
சேனைகளைக் கடல்போல் விரியப் பெற்றுள்ள இராவணன் அலறுமாறு,
வலிமை வாய்ந்த அவனுடைய அகன்ற தோள்களை நெரித்துப் பின்னர்
அவன் சாமகானம் பாடக் கேட்டுகந்த முதல்வரான சிவபெருமான்,
கட்டுக்களையுடைய கொடிய வில்லேந்தி, உமாதேவியைத் தம்திருமேனியின்
ஒருபாகமாகப் பிரியாது பெற்று, திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார்.
|