பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)65. திருக்கச்சி நெறிக்காரைக்காடு841

ஏறணிந்தார் கொடியதன்மே லென்பணிந்தார்      வரைமார்பில்
நீறணிந்தார் கலிக்கச்சி நெறிக்காரைக்
     காட்டாரே.                        3

3495. பிறைநவின்ற செஞ்சடைகள் பின்றாழப்
       பூதங்கள்
மறைநவின்ற பாடலோ டாடலராய்
     மழுவேந்திச்
சிறைநவின்ற வண்டினங்கள் தீங்கனிவாய்த்
     தேன்கதுவும்
நிறைநவின்ற கலிக்கச்சி நெறிக்காரைக்
     காட்டாரே.                       4


உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாதியாகக் கொண்டவர். குளிர்ந்த
சடைமீது இளம்பிறைச் சந்திரனோடு, கங்கை, பாம்பு இவற்றை அணிந்து
மகிழ்ந்தவர். வெற்றிக் கொடியில் வெண்ணிற இடபத்தைக் கொண்டுள்ளார்.
மலைபோன்ற மார்பில் எலும்பு மாலையை அணிந்துள்ளார். திருநீற்றையும்
அணிந்துள்ளார்.

     கு-ரை: கொடி இடையை - பூங்கொடிபோலும் இடையுடைய உமா
தேவியாரை. கூறு அணிந்தார் - (இடப்) பாதியாகக் கொண்டார். உகந்தார்
- மகிழ்ந்தார். கொடியதன்மேல் - கொடியின்மேல். வெள்ளை -
வெண்மையாகிய. ஆன் ஏறு அணிந்தார் - இடபத்தைக் கொண்டார்.
வரைமார்பில் - மலைபோன்ற மார்பில். என்பு - எலும்பு; மாலையை
அணிந்தார். நீறு அணிந்தார் - திருநீற்றையும் அணிந்தார். கொடிஇடை
- அன்மொழித்தொகை.

     4. பொ-ரை: பிறைச்சந்திரனைச் சூடிய சிவந்த சடைகள் பின் பக்கம்
தொங்க, பூதகணங்கள் நால்வேதங்களை ஓதப் பாடலும், ஆடலும் கொண்டு
மழுப்படை ஏந்திச் சிவபெருமான் விளங்குகின்றார். அப்பெருமான்
சிறகுகளையுடைய வண்டுகள் இனிய கனிகளில் சொட்டும் தேனை உறிஞ்சி
உண்ட மகிழ்ச்சியில் இன்னொலி செய்யும் திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில்
வீற்றிருந் தருளுகின்றார்.

     கு-ரை: நவின்ற - தங்கிய. பின் - பின்புறத்தில். தாழ - தொங்க.
பூதங்கள் - பூதங்கள்; பாடும். மறை நவின்ற - வேதங்களைப்