3496. |
அன்றாலின் கீழிருந்தங் கறம்புரிந்த |
|
வருளாளர்
குன்றாத வெஞ்சிலையிற் கோளரவ
நாண்கொளுவி
ஒன்றாதார் புரமூன்று மோங்கெரியில்
வெந்தவிய
நின்றாருங் கலிக்கச்சி நெறிக்காரைக்
காட்டாரே. 5 |
3497. |
பன்மலர்கள் கொண்டடிக்கீழ் வானோர்கள் |
|
பணிந்திறைஞ்ச
நன்மையிலா வல்லவுணர் நகர்மூன்று
மொருநொடியில் |
பாடுகின்ற (பாடலோடு)
ஆடலர் ஆய் - ஆடுதலை உடையவராய்.
(சோலைகளில்) சிறைநவின்ற - சிறகுகளையுடைய; வண்டு இனங்கள்.
தீங்கனி வாய்த்தேன் - மலரிலுள்ள தேனை வெறுத்து இனிய கனிகளில்
சொட்டும் தேனை. கதுவும் - பற்றியுண்பதால். நவின்ற - உண்டான.
நிறைகலி - நிறைந்த ஓசையையுடைய (கச்சி).
5.
பொ-ரை: சிவபெருமான் அன்று ஆலமரநிழலின் கீழிருந்து
சனகாதி முனிவர்கட்கு அறம் உரைத்த அருளாளர், குன்றாத
வலிமையுடைய மேருமலையை வில்லாகக் கொண்டு, கொல்லும்
தன்மையுடைய பாம்பை நாணாகப்பூட்டி, பகையசுரர்களின் முப்புரங்களை
மிக்க நெருப்பில் வெந்தழியும்படி செய்தவர். அப்பெருமான் ஒலிமிகுந்த
திருக்கச்சி நெறிக்காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
அன்று - அக்காலத்தில். ஆலின்கீழ் இருந்து - கல்லால
மரத்தின் அடியில் வீற்றிருந்து. அறம் - சிவதருமமாகிய சரியை,
கிரியைகளையும். (யோக, ஞானங்களையும்) புரிந்த - விரும்பியுரைத்த.
அருளாளர் - கிருபையுடையவர். குன்றாத - வலிமையிற் குறையாத. கோள்
அரவம் - கொல்லுதலையுடைய பாம்பை. நாண் கொளுவி - நாணாகப்பூட்டி.
ஒன்றாதார் - பகைவராகிய அசுரர்களின் (புரம் மூன்றும்). ஓங்கு எரியில் -
மிக்க நெருப்பில். வெந்து அவிய - வெந்தொழிய.
6.
பொ-ரை: தேவர்கள் பலவகையான மலர்களைத் தூவி இறைவனின்
திருவடிக்கீழ்ப் பணிந்து வணங்க, நன்மைபுரியாது தீமை
|