|
வின்மலையி
னாண்கொளுவி வெங்கணையா
லெய்தழித்த
நின்மலனார் கலிக்கச்சி நெறிக்காரைக்
காட்டாரே. 6 |
3498. |
புற்றிடை வாளரவினொடு புனைகொன்றை |
|
மதமத்தம்
எற்றொழியா வலைபுனலோ டிளமதிய
மேந்துசடைப்
பெற்றுடையா ரொருபாகம் பெண்ணுடையார்
கண்ணமரும்
நெற்றியினார் கலிக்கச்சி நெறிக்காரைக்
காட்டாரே. 7 |
செய்த வலிய அசுரர்களின்
மூன்று நகரங்களையும், ஒரு நொடியில்,
மேருமலையை வில்லாகக் கொண்டு, வாசுகி என்னும் பாம்பை நாணாகக்
கொண்டு அக்கினியாகிய அம்பை எய்து அழித்த, இயல்பாகவே பாசங்களின்
நீங்கிய சிவபெருமான் ஒலிமிக்க திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில்
வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
பன்மலர்கள் கொண்டு - பலவகை மலர்களையும் கொண்டு.
(தூவி) அடிக்கீழ்ப்பணிந்து இறைஞ்ச - திருவடியின்கீழ்ப் பணிந்துவணங்க.
நன்மை இலா - தீமை செய்தலையுடைய. வில் மலையின் - வில்லாகிய
மலையில். வெம்கணையால் - திருமாலாகிய கொடிய அம்பினால். நகர்
மூன்றும் - முப்புரங்களையும். ஒரு நொடியில் - ஒரு மாத்திரைப்பொழுதில்.
நின்மலனார் - இயல்பாகவே பாசங்களின் நீங்கிய பெருமானார்.
7.
பொ-ரை: சிவபெருமான் புற்றில் வாழும் ஒளிமிக்க பாம்பையும்,
கொன்றை மலரையும், ஊமத்தை மலரையும் அணிந்து, ஓய்தல் இல்லாது
அலைவீசும் கங்கையோடு, பிறைச்சந்திரனையும் தாங்கிய சடையையுடையவர்.
தம் திருமேனியில் ஒருபாகமாக உமாதேவியைக் கொண்டவர்.
நெற்றிக்கண்ணையுடையவர். அப்பெருமான் ஒலிமிக்க
திருக்கச்சிநெறிக்காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார்.
|