|
மானின்விழி
மலைமகளோ
டொருபாகம் பிரிவரியார்
தேனிலவு மலர்ச்சோலைத்
திருவேட்டக் குடியாரே. 7 |
3510. |
துறையுலவு கடலோதஞ் |
|
சுரிசங்க
மிடறிப்போய்
நறையுலவும் பொழிற்புன்னை
நன்னீழற் கீழமரும்
இறைபயிலு மிராவணன்றன்
றலைபத்து மிருபதுதோள்
திறலழிய வடர்த்தாருந்
திருவேட்டக் குடியாரே. 8 |
பறவைகள் விளங்க,
மணம் வீசும் மலர்களையுடைய குளங்களும், தாழைகள்
சூழ்ந்த கடற்கரைச் சோலைகளும், தேன்துளிர்க்கும் மலர்ச் சோலைகளும்
விளங்கும் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில், மான் போன்ற மருண்ட
பார்வையுடைய மலைமகளான உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு
பாகமாகக் கொண்டு பிரிதலில்லாமல் வீற்றிருந்தருளுகின்றார் சிவபெருமான்.
கு-ரை:
பால் நிலவும் - பால்போல் விளங்குகின்ற. பங்கயத்து -
தாமரை மலரில். நல் - நல்ல. வெண்குருகு - வெண்மையான அன்னப்
பறவை (தங்கும்) கான்நிலவும் - வாசனைவீசும். மலர்ப்பொய்கை -
மலர்களையுடைய குளங்களையும். கைதல் - தாழைகள். சூழ் - சூழ்ந்த.
கழிக்கானல் - கழியருகேயுள்ளே கடற்கரைச் சோலைகளையும் உடைய
திருவேட்டக்குடி என்க. பிரிவு அரியார் - பிரிவு இல்லாதவர். அரிது
இன்மைப் பொருளில் வந்தது. உறற்பால தீண்டாவிடுதல் அரிது -
என்புழிப்போல.
8.
பொ-ரை: கரையை வந்தடைகின்ற கடலலைகள் சுரி சங்குகளை
வீச, தேன் துளிக்கும் நறுமணமுடைய புன்னை மரங்கள் நிறைந்த சோலைகள்
நிழலைத்தரத் திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்
சிவபெருமான் இலங்கை வேந்தனான இராவணனின் தலைகள் பத்தும்
இருபது தோள்களும் வலிமை இழக்குமாறு அடர்த்தவர்.
|