3512. |
இகழ்ந்துரைக்குஞ் சமணர்களு |
|
மிடும்போர்வைச்
சாக்கியரும்
புகழ்ந்துரையாப் பாவிகள்சொற்
கொள்ளேன்மின் பொருளென்ன
நிகழ்ந்திலங்கு வெண்மணலி
ணிறைத்துண்டப் பிறைக்கற்றை
திகழ்ந்திலங்கு செஞ்சடையார்
திருவேட்டக் குடியாரே. 10 |
3513. |
தெண்டிரைசேர் வயலுடுத்த |
|
திருவேட்டக்
குடியாரைத்
தண்டலைசூழ் கலிக்காழித்
தமிழ்ஞான சம்பந்தன்
ஒண்டமிழ்நூ லிவைபத்து
முணர்ந்தேத்த வல்லார்போய்
உண்டுடுப்பில் வானவரோ
டுயர்வானத் திருப்பாரே. 11 |
திருச்சிற்றம்பலம்
10.
பொ-ரை: வேதவள்ளியை நிந்தனை செய்யும் சமணர்களும்,
பௌத்தர்களும் இறைவனைப் புகழ்ந்துரையாத பாவிகள். ஆதலால்
அவர்களுடைய சொற்களைப் பொருளெனக் கொள்ள வேண்டா. வெண்மணலைப் போன்ற ஒளிக்கற்றையுடைய
பிறைச் சந்திரனைச் சிவந்த
சடையில் கொண்டு திகழும் சிவபெருமான் திருவேட்டக்குடி என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமானைப் போற்றி
வழிபடுங்கள்.
கு-ரை:
நிகழ்ந்து - துறையிற் பொருந்தி. இலங்கும் - விளங்குகின்ற.
வெண்மணலின் - மணலின் வெண்மையைப்போல. நிறை - வெள் ஒளியால்
நிறைந்த. துண்டப் பிறை - பிறைத்துண்டம் அணிந்த, (கற்றையாகத் திகழ்ந்து
இலங்கும், செஞ்சடையார் திருவேட்டக் குடியார்).
11.
பொ-ரை: தெளிந்த நீர் அலைகளையுடைய வயல்கள் நிறைந்த
திருவேட்டக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும்
|