பக்கம் எண் :

860திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

  வெங்கதிர்வி ளங்குலக மெங்குமெதிர்
     பொங்கெரிபு லன்கள்களைவோர்
வெங்குருவி ளங்கியுமை பங்கர்சர
     ணங்கள்பணி வெங்குருவதே.        4

3518. ஆணியல்பு காணவன வாணவியல்
       பேணியெதிர் பாணமழைசேர்
தூணியற நாணியற வேணுசிலை
     பேணியற நாணிவிசயன்
பாணியமர் பூணவருண் மாணுபிர
     மாணியிட மேணிமுறையிற்
பாணியுல காளமிக வாணின்மலி
     தோணிநிகர் தோணிபுரமே.         5


வரும் துன்பத்தைக் களைய விரும்புபவர்கள் பணியும் வெங்குரு ஆகும். அது
தேவகுருவாகிய வியாழபகவான் உமை பங்கராகிய பரமனைப் பணிந்து பேறு
பெற்ற தலமாகும்.

     கு-ரை: அங்கண்மதி - அழகிய ஆகாயத்தினிடத்தில் உள்ள
சந்திரனும், வெங்கண் அரவங்கள் - கொடிய பாம்புகளும். எழில் தங்கும்
இதழித் துங்கமலர் - அழகு தங்கிய கொன்றையின் தூயமலரும். தங்கு சடை
- பொருந்திய சடையானது. அங்கி நிகர் - தீயையொக்கும். எங்கள் இறை -
எங்கள் தலைவன். (சினை வினை. முதலொடு முடிந்தது) வெங்கதிர் -
சூரியனால், விளங்கும் - விளங்குகின்ற. உலகமெங்கும் - உலகில் உள்ள
அனைவரும். எதிர் - நல்வழிக்குமாறாக. பொங்கு - மிக. எரி - வருத்துகின்ற.
புலன்கள் - மனம் முதலிய அந்தக் கரணங்களின் சேட்டையை. களைவோர்
- நீக்க விரும்புவோர். வெங்குரு - கொடிய தேவ குருவினால். விளங்கி
தமது துயர் களைதற்கிடமிதுவே யென்று தெளிந்து. உமைபங்கர் -
சிவபெருமானின் - சரணங்கள் பணி - பாதங்களைப் பணிந்த வெங்குரு அது.
வெங்குரு என்னும் அத்தலமாம்.

     5. பொ-ரை: விசயனுடைய வீரத்தன்மையை உமை காண வனத்தில்
வாழும் வேடன் வடிவம் கொண்டு, அவனுக்கு எதிராகப் போர் தொடங்கி,
அவன் சொரியும் மழைபோன்ற அம்புகளும், அவ்வம்புகள் தங்கிய
அம்பறாத்துணியும் நீங்கவும், வில்நாண் அறுபடவும், வளைந்த மூங்கிலால்
வடிவமைத்த வில்லைத் துணித்தவர்.