பக்கம் எண் :

876திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3534. பரியதிரை யெரியபுனல் வரியபுலி
       யுரியதுடை பரிசையுடையான்
வரியவளை யரியகணி யுருவினொடு
     புரிவினவர் பிரிவினகர்தான்
பெரியவெரி யுருவமது தெரியவுரு
     பரிவுதரு மருமையதனால்
கரியவனு மரியமறை புரியவனு
     மருவுகயி லாயமலையே.           9


மலையில் சிவபெருமான் வீற்றிருத்தலைப் பொருட்படுத்தாது, இராவணன்
அதனைப் பெயர்க்க முயல, ஒப்பற்ற உமாதேவி அஞ்சவும், சிவபெருமான்
நடனம்புரியும் தன் காற்பெருவிரலை ஊன்றி அறிவற்ற இராவணனின் கழுத்து
முறியும்படி செய்த கயிலாயமலையே சிவபெருமான் வீற்றிருந்தருளும்
இடமாகும்.

     கு-ரை: பொருப்பிடை - மலையில், விருப்புற - ஆசையோடு,
இருக்கையை - பெருமான் வீற்றிருத்தலை, அரக்கன் உணராது - இராவணன்
பொருட்படுத்தாமல், மருப்பிடை - தந்தத்தில், நெருப்பெழு - அக்கினிப்
பொறி கக்கும்படியாக, செரு - போரை, தருக்கொடு - கர்வத்துடன் செய்த,
பருத்தகளிறின் - பருத்த யானையைப் போல, (மலையொடு பொருதமால்
யானையைப்போல எடுக்கலுற்று) ஒருத்தியை - ஒப்பற்றவளாகிய உமா
தேவியை, வெருக்குற - அச்சம் உறும்படி. ஒருக்கு - ஒருங்கு. உடன்-உடனே,
வெருட்டலும் -அஞ்சச்செய்த அளவில், நிருத்தவிரலால் - நடம்புரியும் விரல்
ஒன்றினால், கருத்தில் ஒருத்தனை - அறிவற்ற ஒருத்தனாகிய
அவ்விராவணனை. எருத்துஇற - கழுத்து முறியும்படி, நெருக்கென
-நெருக்கென்று. நரித்த - முறித்து அரைத்த; கயிலாய மலையே. பெருமான்
இடமாகும் என்பது குறிப்பெச்சம்.

     9. பொ-ரை: சிவபெருமான் நெருப்பையும், பெரிய அலைகளையுடைய
கங்கையையும் கொண்டவர். வரிகளையுடைய புலித்தோலை ஆடையாக
அணிந்தவர். கீற்றுக்களையுடைய வளையல்களை அணிந்த செவ்வரி படர்ந்த
கண்களையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக்
கொண்டு பிரிவில்லாது வீற்றிருந்தருளும் இடமாவது, சிவபெருமான் பெரிய
சோதிப்பிழம்பாய் நிற்க அதன் அடியையும், முடியையும் தேடத்தொடங்கிக்
காண்பதற்கரியதாய் விளங்கியதால் நீலநிறத் திருமாலும், அருமறைகள் வல்ல