3535. |
அண்டர்தொழு சண்டி பணி கண்டடிமை |
|
கொண்டவிறை
துண்டமதியோ
டிண்டைபுனை வுண்டசடை முண்டதர
சண்டவிருள் கண்டரிடமாம்
குண்டமண வண்டரவர் மண்டைகையி
லுண்டுளறி மிண்டுசமயம்
கண்டவர்கள் கொண்டவர்கள் பண்டுமறி
யாதகயி லாயமலையே. 10 |
பிரமனும் தவறுணர்ந்து
மன்னிப்பு வேண்டும் பொருட்டுப் பொருந்திய
திருக்கயிலாய மலையாகும்.
கு-ரை:
பரிய திரை - பருத்த அலைகளையுடைய, எளிய - அக்கினி
தோன்றுவதற்கு இடமாகிய, புனல் - கங்கைநீரும், வரிய - வரிகளையுடைய,
புலியுரியது - புலியின் தோலாகிய, உடை - ஆடையையும், (கொண்ட)
பரிசையுடையான் - தன்மையையுடைவன். வரிய - கீற்றுக்களையுடைய, வளை
- வளைகளையணிந்த, அரிய - செவ்வரியுடைய, கணி
-கண்ணி(உமாதேவியாரின்) உருவின் ஒடு-உடம்போடு, புரிவின்
அவர்-கலத்தலையுடைய அச் சிவபெருமான்; பிரிவு இல் நகர்தான் - பிரியாத
தலமாவது, பெரிய - மிகப்பெரியதாகிய, எரி உருவம் அது - தீயாகிய
வடிவத்தை, தெரிய - தேடத் தொடங்க, உரு - அவ்வடிவம். பரிவு தரும்
-துன்பத்தைத் தரக்கூடிய, அருமை அதனால் - அரிய தன்மை
உடைமையினால், கரியவனும் - திருமாலும், (அரிய) மறை - வேதத்தை.
புரியவனும் - விரும்புகின்ற பிரமனும், மருவு - (மன்னிப்பு வேண்டும்
பொருட்டு) பொருந்திய கயிலாய மலையே.
10.
பொ-ரை: தேவர்களும் தொழுது போற்றும் சண்டேசுவர
நாயனாரின் சிவவழிபாட்டைக் கண்டு மகிழ்ந்து ஆட்கொண்டவர்
சிவபெருமான். பிறைச்சந்திரனை இண்டைமாலையால் அலங்கரிக்கப்பட்ட
சடைமுடியில் தரித்தும், மண்டையோட்டை மாலையாக அணிந்தும், கடிய
இருள் போன்ற கழுத்தையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம்,
குண்டான சமணர்களும், கையிலேந்திய மண்டையில் உணவு உண்டு
திரியும் புத்தர்களும், அச் சமயங்களைக் கண்டவர்களும்,
அநுட்டிப்போர்களும் முன்பு அறியாத திருக்கயிலாய மலையாகும்.
|