3542. |
பாரகம் விளங்கிய பகீரத |
|
னருந்தவ
முயன்றபணிகண்
டாரருள் புரிந்தலைகொள் கங்கைசடை
யேற்றவரன் மலையைவினவில்
வாரத ரிருங்குறவர் சேவலின்
மடுத்தவ ரெரித்தவிறகில்
காரகி லிரும்புகை விசும்புகமழ்
கின்றகா ளத்திமலையே. 6 |
(கொலை செய்து உரிபோர்த்த
சிவன்.) அலைகொள் - அலைகளையுடைய,
புனல் அருவி பல - நீரையுடைய அருவிகள், பல சுனைகள் வழி - பல
சுனைகளிடத்தில். இழிய - பாய, அயல் - அருகிலே, நிலவும் - பொருந்திய,
முதுவேய் - முதிய மூங்கில்கள், ஒளிகொள் - பிரகாசிக்கின்ற, கதிர்
-கிரணங்களையுடைய, முத்தம் அவை - முத்துக்களை, கலகலவென
(அருவியின் வெள் ஒளிக்கு எங்கள் ஒளி தோற்றனவா என்று சொரிவது
போல்) சிந்து - சொரிகின்ற (காளத்தி மலை),
6.
பொ-ரை: பாரதபூமியில் சிறந்து விளங்கிய பகீரதன் என்னும்
மன்னன், பிதிரர்கட்கு நற்கதி உண்டாகுமாறு அரியதவம் செய்து வானிலுள்ள
கங்கையைப் பூவுலகிற்குக் கொண்டுவர, அவனுக்கு அருள்செய்து,
பெருக்கெடுத்த கங்கையைத் தன் சடையில் தாங்கிய சிவபெருமான்
வீற்றிருந்தருளும் மலை, நெடிய வழிகளையுடைய கானக் குறவர்கள் தங்கள்
குடிசையில் அடுப்பெரித்த, கரிய அகில் கட்டையிலிருந்து கிளம்பிய
பெரியபுகை ஆகாயத்தில் மணக்கின்ற திருக்காளத்திமலையாகும்.
கு-ரை:
பாரகம் - பூமியில் (விளங்கிய பகீரதன்). அருந்தவம் முயன்ற
-அரிய தவம் செய்த, பணி கண்டு - வினையைக் கண்டு, ஆர்
அருள்புரிந்து - அரிய கிருபைசெய்து, (அலைகொள்கங்கையை) சடைஏற்ற
அரன் -சடையில்தாங்கிய சிவபெருமானது, வார் அதர் - நெடிய
வழிகளையுடைய, இரும் - பெரிய, சேவலின் - தங்கும் இடமாகிய
குடிசையில், அவர் - அவர்கள், மடுத்து - மூட்டி, (எரித்த விறகில் - கரிய,
அகில் கட்டையிலிருந்து கிளம்பிய) இரும்புகை - பெரிய புகை, விசும்பு -
வான் உலகில், கமழ் -மணக்கின்ற காளத்தி மலை.
|