பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)69. திருக்காளத்தி883

3541. மலையின்மிசை தனின்முகில்போல் வருவதொரு
       மதகரியை மழைபொலலறக்
கொலைசெய்துமை யஞ்சவுரி போர்த்தசிவன்
     மேவுமலை கூறிவினவில்
அலைகொள்புன லருவிபல சுனைகள்வழி
     யிழியவய னிலவுமுதுவேய்
கலகலென வொளிகொள்கதிர் முத்தமவை
     சிந்துகா ளத்திமலையே.              5


சடைமுடியில் தூயசந்திரனைச் சூடி,சுடுகாட்டில் நடனம் ஆடும் சிவபெருமான்
வீற்றிருந்தருளும் மலை, வாயே அபிடேக கலசமாக வழிபாடு செய்த
வேடராகிய கண்ணப்பர், தம் மலர்போன்ற கண்ணைக் கொடிய அம்பினால்
தோண்டி இறைவனுக்கு அப்பி, இறைவனின் திருவடியைச் சார்ந்த
சிறப்புடைய திருக்காளத்தி மலையாகும்.

     கு-ரை: வேய் அனைய - மூங்கிலையொத்த.(தோள்). விடை ஏறி
-விடையை ஊர்தியாக உடையவன். தூய - வெண்மையான. மதிசூடி -
சந்திரனை அணிந்தவன்; (சுடுகாட்டில் நடனமாடி). வாய் கலசமாக - வாயே
அபிடேக கலசமாக. வழிபாடு செய்யும் - பூசித்த. வேடன் - கண்ணப்ப
நாயனார். மலராகும் நயனம் - மலர் போன்ற கண்ணை. காய் கணையினால்
-கோபிக்கின்ற அம்பினால். இடந்து - தோண்டி. ஈசன் அடி கூடும் -
சிவபிரானின் திருவடி சேர்ந்த; காளத்தி மலை. காய் கணை -
வினைத்தொகை.

     5. பொ-ரை: மலையின்மேல் தவழும் மேகம்போல் வந்த
மதம்பொருந்திய யானையானது இடிபோல் பிளிற, அதனைக் கொன்று
உமாதேவி அஞ்சும்படி அதன் தோலைப் போர்த்திக் கொண்ட சிவபெருமான்
வீற்றிருந்தருளும் மலை, அலைகளையுடைய நீர் மலையிலிருந்து அருவிபோல்
இழிந்து, பல சுனைகளின் வழியாக வயல்களில் பாய, அருகிலுள்ள முற்றிய
மூங்கில்கள் கலகல என்ற ஒலியுடன், கதிர்போல் ஒளிரும் முத்துக்களைச்
சிந்தும் திருக்காளத்திமலையாகும்.      கு-ரை: மலையின் மிசைதனின் -
மலையின் மேல் இடத்தில், முகில்போல் வருவது ஒரு மதகரி - முகில்போல்
வந்த ஓர் மதங்கொண்ட யானை, மழைபோல் அலற - இடியைப்
போல்பிளிறும்படி,