|
வரியசிலை
வேடுவர்க ளாடவர்க
ணீடுவரை யூடுவரலால்
கரியினொடு வரியுழுவை யரியினமும்
வெருவுகா ளத்திமலையே. 8 |
3545. |
இனதளவி லிவனதடி யிணையுமுடி |
|
யறிதுமென
விகலுமிருவர்
தனதுருவ மறிவரிய சகலசிவன்
மேவுமலை தன்னை வினவில்
புனவர்புன மயிலனைய மாதரொடு
மைந்தரு மணம்புணருநாள்
கனகமென மலர்களணி வேங்கைக
ணிலாவுகா ளத்திமலையே. 9 |
யானைகளும், வரிகளையுடைய
புலிகளும், சிங்கக் கூட்டங்களும் அஞ்சுகின்ற
திருக்காளத்திமலையாகும்.
கு-ரை:
சுரி - சுரிந்த, எரி அனைய மயிர் - அக்கினியைப் போன்ற
செம்பட்டை மயிர்களையுடைய (இராவணனை-வலிமை அழியும்படி). பெரிய
வரை ஊன்றி - பெரிய மலையின் அடியில் அழுத்தி, அருள் செய்த சிவன்
-மீண்டும் அவனுக்கே அருள் செய்த சிவன்(மேவும்). மலை - மலையையும்,
பெற்றி - அதன் சிறப்பையும் வினவின் - வினவினால்(முறையே) வரிய -
நெடிய, சிலை - வில்லையேந்திய, வேடுவர்கள் ஆடவர்கள் - வேட்டுவ
ஆண் மக்கள், நீடு வரை யூடு - நெடிய மலையின் வழியாக, வரலால்
-வருவதால், வரி - கீற்றுக்களையுடைய, உழுவையும் - புலியும், அரியினமும்
-சிங்கக் கூட்டமும் (யானைகளோடு) வெருவு - அஞ்சுகின்ற காளத்திமலை.
மலை, பெற்றி - எதிர் நிரனிறை. பெற்றி, கரியினொடு வெருவு
என்பதனாலும், மலை - காளத்திமலை என்பதனாலும் கொள்க.
9.
பொ-ரை: குறிப்பிட்ட இந்தக் கால எல்லைக்குள் இவன்
திருவடியும், திருமுடியும் அறியவேண்டும் என்று தமக்குள் மாறுபட்ட
திருமாலும், பிரமனும் முனைந்து தேடியும் அறிவதற்கு அரியவனாய்
விளங்கியவன் சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருக்கும் மலை,
தினைப்புனத்திலுள்ள வேடுவர்கள் மயிலொத்த சாயலுடைய பெண்களை
மைந்தர்களுக்கு மணம் செய்விக்கும் நாளில் பொன்
|