3546. |
நின்றுகவ ளம்பலகொள் கையரொடு |
|
மெய்யிலிடு போர்வையவரும்
நன்றியறி யாதவகை நின்றசிவன்
மேவுமலை நாடிவினவில்
குன்றின்மலி துன்றுபொழி னின்றகுளிர்
சந்தின்முறி தின்றுகுலவிக்
கன்றினொடு சென்றுபிடி நின்றுவிளை
யாடுகா ளத்திமலையே. 10 |
போன்ற மலர்களைப்
பூத்து அழகிய வேங்கைகள் விளங்கும்
திருக்காளத்திமலையாகும்.
கு
- ரை: இ(ன்)னது அளவில் - குறிப்பிட்ட இந்தக் கால
எல்லைக்குள். (இவனது அடியும் முடியும்) அறிதும் - அறிவோம், இகலும்
- மாறுபட்ட. சகள சிவன் - திருவுருவுடைய சிவன், புனவர் -
தினைப்புனத்திலுள்ளவர்களாகிய வேடுவர்கள், மயில் அனைய -
மயிலையொத்த. மாதருடன் - பெண்களோடு, மைந்தரும், ஆடவரும், மணம்
புணரும் நாள் - மணம் புணர்விக்கும் நாளில். அணி வேங்கை - வேங்கை
மரங்களின் வரிசை. கனகம் என - தங்கத்தைப் போல, மலர்கள் -
பூக்களால், நிலாவு - விளங்குகின்ற காளத்திமலை. வேங்கை பூத்தலால்
மணம் செய்காலம் இதுவென உணரும் மரபு கூறியவாறு. இறைவன் வடிவம்
சகளம், நிஷ்களம், சகள நிஷ்களம் என மூன்று. சகளம் - மான், மழு,
சதுர்ப்புசம்,சந்திரசூடம் முதலிய உருவத்தோற்றம். நிஷ்களம் -
அருவத்தோற்றம். சகள நிஷ்களம் - உரு அருவத்தோற்றம் - சிவலிங்க
வடிவம்.
10.
பொ- ரை: நின்று கொண்டே கவளமாக உணவு உண்ணும்
சமணர்களும், உடம்பில் போர்த்த போர்வையுடைய புத்தர்களும் தனது
பேரருளை அறியாவண்ணம் விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும்
மலை, நெருங்கிய சோலைகளில் உள்ள குளிர்ந்த சந்தனத் தழைகளைத்
தம் கன்றுகளுடன் சென்று தின்று பெண் யானைகள் விளையாடுகின்ற
திருக்காளத்தி மலையாகும்.
கு
- ரை: நின்று- நின்று கொண்டே, கவளம் பல கொள் - பல
கவளங்களை யுண்ணுகின்ற, கையரொடு - கையையுடைய சமணர்களுடன்.
மெய்யில் இடு - உடம்பில் போர்த்த, போர்வையரும் - போர்வையை
உடையவர்களாகிய புத்தர்களும், நன்றி - தனது அனந்த
|