பக்கம் எண் :

896திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

  கலங்கனுரை யுந்தியெதிர் வந்தகய
     மூ்ாகிமலர் கொண்டுமகிழா
மலங்கிவரு காவிரி நிரந்துபொழி
     கின்றமயி லாடுதுறையே.             8

3556. ஒண்டிறலி னான்முகனு மாலுமிக
       நேடிண ராதவகையால்
அண்டமுற வங்கியுரு வாகிமிக
     நீண்டவர னாரதிடமாம்
கொண்டையிரை கொண்டுகெளி றாருட
     னிருந்துகிளர் வாயறுதல்சேர்
வண்டன்மணல் கெண்டிமட நாரையிளை
     யாடுமயி லாடுதுறையே.               9


பாய்ந்து அங்குள்ள மணமிக்க மலர்களை அடித்துக் கொண்டு களிப்புடன்
சுழித்து வருகின்ற காவிரியாறு பாய்வதால் வளமிக்க திரும்யிலாடுதுறை
என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: (இலங்கை நகர் மன்னன் முடியொருபதினொடு இருபது)
தோள் நெரிய - தோள்கள் அரைபடும்படி. விலங்கலில் - கைலைமலையில்.
அடர்த்து - நெருக்கி, அருள்புரிந்தவன். வினவுதிர்களேல் -
கேட்பீர்களேயானால், கலங்கல் நுரை உந்தி - கலங்கலோடு நுரையைத்
தள்ளி. எதிர் வந்த - எதிரேயுள்ள. கயம் மூழ்கி - குள்த்தில் பாய்ந்து,
மலர்கொண்டு - அங்குள்ள மலர்களை அடித்துக்கொண்டு, (அதனால்)
மகிழ்ந்த, மலங்கி வரு - சுழித்து வருகின்ற, காவிரியாறு, நிரந்து - பரவி.
பொழிகின்ற - வளம் கொழிக்கினற, மயிலாடுதுறை. வந்த - உள்ள என்னும்
பொருள் தந்து நின்றது. “வான் வந்த தேவர்களும் மாலயனோடிந்திரனும்”
என்புழிப்போல (தி. 8 திருவம்மானை. 4). தோள் - இசை நோக்கிக்
குறுக்கல் விகாரமற்றது. மேல்வீழிமிழிமலைப் (தி. 3 ப. 85) பதிகத்தும்
காண்க.

     9. பொ-ரை: மிகுந்த வலிமையுடைய பிரனும், திருமாலும் தேடியும்
உணரமடியபவண்ணம், அகாயம்வரை அளாவி நெருப்புப் பிழம்பாய் நீண்டு
நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, கொண்டைமீனை
இரையாக உண்டு, கெளிறு, ஆரல் முதலிய மீன்கள் விளங்குகின்ற ஆற்றின்
கரையிலுள்ள நாரை, தண்ணீர் அறுத்தலால் உண்டான வண்டல் மண்ணைக்
கிளறி விளையாடும் திருமயிலாடு துறை என்னும் திருத்தலமாகும்.