3554. |
அவ்வதிசை யாருமடி யாருமுள |
|
ராகவருள்
செய்தவர்கண்மேல்
எவ்வமற வைகலு மிரங்கியெரி
யாடுமெம தீசனிடமாம்
கவ்வையொடு காவிரி கலந்துவரு
தென்கரை நிரந்துகமழ்பூ
மவ்வலொடு மாதவி மயங்கிமண
நாறுமயி லாடுருறையே. 7 |
3555. |
இலங்கையநகர் மன்னன்முடி யொருபதினொ |
|
டிருபருதொ ணெரியவிரலால்
விலங்கலி லடர்த்தருள் புரிந்தவ
ரிருந்தவிடம் வினவுதிர்களேல் |
7.
பொ-ரை: அந்தந்தத் திக்குகளிலுள்ள எல்லா அடியவர்களும் நல்ல
வண்ணம் வாழும் பொருட்டு அருள்செய்து, அவர்களுடைய வினைகள். நீங்க
நாள்தோறும் இரங்கித் தீயேந்தி ஆடுகின்ற எம் இறைவனான சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடம், ஆரவாரத் தோடு வரும் காவிரி - மணமிக்க
மல்லிகை, மாரவி முதலான மலர்களைத் தள்ளிவர நறுமணம் கமழும் அதன்
தென்கரையிலுள்ள திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும்.
கு-ரை:
அவ்வதிசையாரும் - (அவ். அ. திசையாரும்). அந்தந்தத்
திக்குகளில் உள்ள ஏனைமாந்தரும். உளர் ஆக - நன்றாக. வாழும்
பொருட்டு, அவர்கள்பால் உள்ள. எவ்வம்அற - வினைகள் நீங்க.
வைகலும் - நாடோறும். இரங்ககி அருள்செய்து, எரி ஆடும் - அக்கினியில்
ஆடுகின்ற. எமது ஈசன் இடமாம். கவ்வையொடு கலந்து காவிரி வரும்
தென்கரையில் கமழ்பூ மவ்வலொடு மாதவி மயங்கி மணம் நாறும்
மயிலாடுதுறை எனக் கூட்டுக. கவ்வை - ஆரவாரம். மவ்வல் - முல்லை.
மாதவி - ஒரு வகை மரவிசேடம். மடங்கி - கலந்து நிரந்து - பரவி.
அவ்வத்திசை - சந்தம் நோக்கி வலிமிகாதாயிற்று.
8.
பொ-ரை: இலங்கை மன்னனான இராவணனின் பத்து மடிகளையும்,
இருபது தோள்களையும் நெரியும்படி தன்காற் பெருவிரலைக் கயிலை
மலையில் ஊன்றி அடர்த்துப் பின் அவனுக்கு அருள்புரிந்தவர் சிவபெருமான்.
அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம், கலங்களோடு நுரையைத் தள்ளி,
எதிரேயுள்ள குளத்தில்
|