3583. |
காலைமட வார்கள்புன லாடுவது |
|
கௌவைகடி யார்மறுகெலாம்
மாலைமண நாறுபழை யாறைமழ
பாடியழ காயமலிசீர்ப்
பாலையன நீறுபுனை மார்பனுறை
பட்டிசர மேபரவுவார்
மேலையொரு மால்கடல்கள் போல்பெருகி
விண்ணுலக மாளுமவரே. 3 |
வீற்றிருந்தருளும்
தலமாவது பூமியில் மிக்க புகழையுடைய திருப்பழையாறை
ஆகும். அங்குள்ள திருப்பட்டீச்சரம் என்னும் கோயிலிலுள்ள இறைவனைப்
போற்றி வணங்க நம் வினைகள் யாவும் அடியோடு அழியும்.
கு-ரை:
நீரின்மலி புன்சடையர் - கங்கை நீரினால் நனைந்த
புன்சடையை உடையவர். நீள் அரவு கச்சை (அது) - அவர்கட்கும்
கச்சையாவது நீண்ட பாம்பு. நச்சு இலையது ஓர் கூரின் மலிசூலம் (அது)
ஏந்தி - நஞ்சு பூசிய இலை வடிவத்தையுடையதாகிய ஓர் கூரின் மிகுந்த
சூலத்தினை ஏந்தினவர். உடைகோவணமும் மானின் உரித்தோல் - உடையும்
கோவணமும் மானினுடைய உரித்த தோல். காரின்மலி கொன்றை விரிதார் -
கார்காலத்தில் மிக மலரும் கொன்றை விரிந்த மாலையாகும். கடவுள் -
இத்தகைய கடவுள். காதல்செய்து - விரும்பி. மேய - மேவிய. நகர்தான் -
தலமாவது. பாரின் மலிசீர் - பூமியில் மிகுந்த புகழையுடைய. பழைசை -
திருப்பழையாறையில் உள்ள. பட்டிசரம் - திருப்பட்டீச்சரத்தை. ஏத்த -
துதிக்க. வினை - நமது வினைகள், பற்று அழியும் - அடியோடு அழியும்.
கொன்றை கார்காலத்தில் மலர்வதென்பதைக் கண்ணி கார்நறுங் கொன்றை
என்னும் புறநானூற்றாலும் அறிக. - (1)
3.
பொ-ரை: பெண்கள் காலையில் நீர்நிலைகளில் நீராடுவதால்
உண்டாகும் ஓசையை உடையதாய், மாலையில் பூசை செய்வதால்
வீதிகளிலெல்லாம் நறுமணம் கமழ்வதாய் உள்ள திருப்பழையாறை என்னும்
தலத்தில் மழபாடி என்னும் பகுதியில், தன் திருமேனி முழுவதும் மிக்க
சிறப்புடைய பால்போன்ற திருவெண்ணீற்றைப் பூசிய மார்புடைய
சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலை
வணங்குவார் இம்மையில் கடல்போல் செல்வம் பெருக, மறுமையில்
விண்ணுலகை ஆள்வர்.
|