பக்கம் எண் :

924திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3584. கண்ணின்மிசை நண்ணியிழி விப்பமுக
       மேத்துகமழ் செஞ்சடையினான்
பண்ணின்மிசை நின்றுபல பாணிபட
     வாடவல பான்மதியினான்
மண்ணின்மிசை நேரின்மழ பாடிமலி
     பட்டிசர மேமருவுவார்
விண்ணின்மிசை வாழுமிமை யோரொடுட
     னாதலது மேவலெளிதே.              4


     கு-ரை: காலை மடவார்கள் புனலாடுவது கௌவை - காலை
வேளையில் தண்ணீர்த்துறைகளில் மகளிர் நீராடுவதால் உண்டாகும் ஓசையும்.
மாலை - மாலைவேளையில். கடி ஆர் - புதுமை மிகுந்த, மறுகு எலாம் -
வீதிகளில் எல்லாம். மணம் நாறும் - மணம் மணக்கும் (ஓசையும் மணமும்
என இருபுலன்களின் இனிமை கூறவே, ஏனையமூன்றும்: கண்ணுக்கினிய
காட்சியும் வாய்க்கினிய சுவையும், தென்றற்காற்றால் உடற்கினிய ஊறும்
எக்காலத்தும் எவ்விடத்தும் நுகர்வர் எனப் (பதிவளம் குறிப்பித்தவாறு).
பழையாறை மழபாடி - பழையாறை என்னுந் தலத்தில் மழபாடி என்னும்
பகுதியில். அழகாய - அழகாகிய. மலிசீர் - மிக்க சிறப்புடைய, பாலையன
நீறுபுனை பாலையொத்த திருநீற்றை யணிந்த, மார்பனுறை பட்டிசரமே
பரவுவார் - மார்பினை உடையவராகிய சிவபெருமான் தங்கும் பட்டீச்சரம்
என்னும் கோயிலைத் துதிப்போர் (இம்மையில் மேலை மேன்மை
தருவனவாகிய செல்வங்கள்) மால்கடல்கள்போல் பெருகி - வளரப்பெற்று
(மறுமையில்) விண்ணுலகம் - சொர்க்கலோகத்தை. (ஆளுமவர்) தொன்மை
- தொல்லை யென்று வருவதுபோல், மேன்மை - மேலையென்றாகிப்
பண்பாகுபெயராய்ச் செல்வத்தை யுணர்த்தி நின்றது.

     4. பொ-ரை: சிவபெருமானின் கண்களை உமாதேவி பொத்த,
அதனால் அரும்பிய வியர்வையைக் கங்கையாகச் செஞ்சடையில்
தாங்கியவன். அப்பெருமான் பண்ணிசைகளோடு பாடல்களைப் பாடவும்,
ஆடவும் வல்லவன். பால் போன்ற வெண்ணிறச் சந்திரனைச் சூடியவன்.
அப்பெருமான் மண்ணுலகில் ஒப்பற்ற பெருமையுடைய திருமழபாடி என்னும்
தலத்தில் திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான்.
அவனைப் போற்றி வணங்குபவர்களுக்கு விண்ணுலகிலுள்ள தேவர்களுடன்
வாழ்வது எளிதாகும்.