3585. |
மருவமுழ வதிரமழ பாடிமலி |
|
மத்தவிழ வார்க்கவரையார்
பருவமழை பண்கவர்செய் பட்டிசர
மேயபடர் புன்சடையினான்
வெருவமத யானையுரி போர்த்துமையை
யஞ்சவரு வெள்விடையினான்
உருவமெரி கழல்கடொழ வுள்ளமுடை
யாரையடை யாவினைகளே. 5 |
கு-ரை:
கண்ணின்மிசை - தமது கண்களின் இடத்தில். நண்ணி -
(உமாதேவியாரின் கரங்கள்) சேர்ந்து (மறைத்ததால் அக்கரங்களின் அரும்பிய
வியர்வை நீர்) முகம் - (பரவிய) ஆயிர முகங்களையும். இழிவிப்ப - ஓர்
திவலையாகச் சிறுகுவித்துச் சடையின் ஓர் உரோமத்தில் தாங்க. ஏத்து -
(அதன் பிரவாகத்தால் உலகமழியாமைக் காத்தருளிய திறனைப் பிரமன்
முதலியோர்) துதிக்கப்பெற்ற (செஞ்சடையினான்). கமழ் - (அடியார் புனைந்த
மாலைகளால்) மணம் வீசும்; செஞ்சடையினான். பண்ணின் மிசை -
இசைவழியே பொருந்தி. பலபாணிபட - பல தாள ஒத்துக்களும் பொருந்த.
ஆடவல - ஆடவல்ல. பான்மதியினான் - வெண்மையான சந்திரனை
அணிந்தவன். மண்ணின்மிசை நேர் இல் - பூமியில் தனக்குச் சமானமில்லாத.
மழபாடி - மழபாடி என்னுந் தலத்தில். மலி - தங்கிய. பட்டிசரமே
மருவுவார் - பட்டீச்சரத்தையே பற்றாக அடைவோர். விண்ணின்மிசை
வாழுமிமையோரொடு உடன் ஆதல் அது - வான் உலகில் வாழும்
தேவருடன் வாழ்வதாகிய அத்தகைமை. மேவல் - அடைவது. எளிது -
அவர்களுக்கு ஓர் அரியதன்று. அதனினும் மிக்க சிவலோகத்தில் வாழ்வர்
என்பது குறிப்பெச்சம்.
5.
பொ - ரை: முழவு முதலிய வாத்தியங்கள் அதிர்ந்து ஒலிக்க,
திருமழபாடி என்னும் திருத்தலம் கோயில் உற்சவங்களாலும்,
விழாக்களியாட்டங்களாலும் ஓசை மிகுந்து விளங்குகின்றது. மலை உள்ளதால்
பருவகாலத்தில் மழை பொழிய, வளம் மிகுந்து, கண்டவர் மனத்தைக்
கவர்கின்ற திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் படர்ந்த
செஞ்சடையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான்
அஞ்சத்தக்க மதயானையின் தோலை உமாதேவி அஞ்சுமாறு உரித்துப்
போர்த்துக் கொண்டவன். வெண்ணிற இடபத்தை வாகனமாகக் கொண்டவன்.
நெருப்புப்போன்ற சிவந்த
|