3586. |
மறையினொலி கீதமொடு பாடுவன |
|
பூதமடி
மருவிவிரவார்
பறையினொலி பெருகநிகழ் நட்டமமர்
பட்டிசர மேயபனிகூர்
பிறையினொடு மருவியதொர் சடையினிடை
யேற்றபுன றோற்றநிலையாம்
இறைவனடி முறைமுறையி னேத்துமவர்
தீத்தொழில்க ளில்லர்மிகவே. 6 |
திருமேனியுடைய அச்சிவபெருமானின்
திருவடிகளை உள்ளம் ஒன்றித்
தொழுபவர்களை வினையால் வரும் துன்பம் சாராது.
கு-ரை:
மரு(வு)வ - பொருந்தியனவாகிய, முழவு - முழவு முதலிய
வாச்சியங்களோடு மலி மத்தம் - விழாக்களியாட்டுக்கள் மிகுந்த. விழவு -
உற்சவத்தால் எழும் ஓசைகள். ஆர்க்க - ஆரவாரிக்க. வரை ஆர் -
மலையின் கண்தங்கிப் பொழிகின்ற. பருவம் மழை - பருவகாலத்திற்
பெய்யும் மழையால் உண்டாகிய. பண்(பு) - வளங்கள். கவர்செய் - கண்டார்
மனத்தைக் கவர்கின்ற, (பட்டீச்சரம் மே(வி)ய, படர்ந்த) புன்சடையினான் -
புன்சடைகளையுடையவனும். விடையினான் - விடையையுடையவனும்
எனக்கூட்டுக. அனைவரும் அஞ்சுமாறு யானைத்தோலைப் போர்த்து
அக்கோலத்தோடே உமாதேவியாரும் அஞ்ச அவர் முன்வந்த விடையினான்.
அவனது உருவம் நெருப்பு, அவனது கழல் தொழுவாரை வினைகள்
அடையா என்பது பின்னிரண்டடிகளின் கருத்து. மருவு - உகரச் சாரியை
தொக்குநின்றது. மரூஉ எனினும் ஆம், பண்பு - பண் எனக் கடைக்
குறையாயிற்று. கவர்தலுக்குச் செயப்படுபொருள் வருவித்துரைக்கப்பட்டது.
6.
பொ-ரை: வேதங்கள் ஓதும் ஒலியும், கீதங்கள் பாடும் ஒலியும்,
பூதகணங்கள் திருவடிக்கீழ் அமர்ந்து போற்றும் ஒலியும் கலந்து ஒலிக்க,
பறை என்னும் வாத்திய ஓசையும் பெருகத் திருநடனம் புரியும் சிவபெருமான்
திருப்பட்டீச்சரம் என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான். குளிர்ச்சி
பொருந்திய சந்திரனை அணிந்த சடையிலே கங்கையையும் தாங்கிய
நிலையான தோற்றப் பொலிவு உடையவன். அத்தகைய இறைவனின்
திருவடிகளை நாடொறும் முறைமையோடு போற்றி வணங்குபவர்கள்
துன்புறும் வினைகளிலிருந்து முற்றிலும் நீங்கியவராவர்.
|