3587. |
பிறவிபிணி மூப்பினொடு நீங்கியிமை |
|
யோருலகு
பேணலுறுவார்
துறவியெனு முள்ளமுடை யார்கள்கொடி
வீதியழ காயதொகுசீர்
இறைவனுறை பட்டிசர மேத்தியெழு
வார்கள்வினை யேதுமிலவாய்
நறவவிரை யாலுமொழி யாலும்வழி
பாடுமற வாதவவரே. 7 |
கு-ரை:
மறையின் ஒலி - வேதங்களின் ஓசையும், பூதம் அடிமருவி
- பூதகணங்கள் அடியின் கீழ்ப் பொருந்தி. கீதமொடு - கீதத்தோடும்,
பாடுவன - பாடப்படுவனதாகிய. (ஒலி) - ஓசையும். விரவு ஆர் -
கலத்தலையுடைய. பறையின் - முழவ வாத்தியங்களின். ஒலிபெருக -
ஓசையும் பெருகும்படியாக. நிகழ் நட்டம் அமர் - பொருந்திய
நடனமாடுகின்ற, பட்டிசரமேய - பட்டீச்சரம் என்னும் ஆலயத்தில் தங்கிய.
பனிகூர் - குளிர்ச்சி பொருந்திய. பிறையின்ஓடு - சந்திரனுடனே. மருவியது
- பொருந்தியதாகிய. சடையின் இடை - சடையில். புனல் ஏற்ற - கங்கை
நீரை ஏற்ற. தோற்றம் - தோற்றப் பொலிவு. நிலையாம் - நிலையாகவுள்ள.
இறைவனடி - கடவுளின் திருவடிகளை, முறை - நாடோறும். முறையில்
ஏத்தும் அவர் - முறைமையோடு துதிப்போர். தீத்தொழில்கள் இல்லர்
மிகவே - துன்புறும் வினைகள் முற்றிலுமிலராவர்.
7.
பொ-ரை: பிறவியாகிய நோயும், மூப்பும் நீங்கித் தேவலோகத்தில்
உள்ளவர்களால் பாராட்டப்படுகின்றவர்களும், உலகப் பற்றைத் துறந்த
உள்ளமுடைய ஞானிகளும் வாழ்கின்ற, கொடி அசைகின்ற வீதிகளையுடைய
திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் அழகிய சிறப்புடைய
சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அக்கோயிலைப் போற்றி
வணங்குபவர்கள் வினை சிறிதும் இல்லாதவராகி, தேன் ஒழுகுகின்ற
நறுமணம் கமழும் மலர்களாலும், தோத்திரங்களாலும் சிவனை வழிபட
மறவாதவர்களாவர். அவர்கள் சிவகணங்களோடு உறைவர் என்பது குறிப்பு.
கு-ரை:
பிறவி பிணி மூப்பினொடு நீங்கி - பிறவித்துன்பமும், அதில்
அடையக்கூடிய பிணியும், மூப்பும் ஒழிந்து. இமையோர் உலகு
பேணலுறுவார் - தேவர் உலகமும் பாராட்டி எதிர்கொண்டு அழைக்கும்
தன்மை உள்ளவராவார்கள். துறவி என்னும் உள்ளம்
|