3588. |
நேசமிகு தோள்வலவ னாகியிறை |
|
வன்மலையை நீக்கியிடலும்
நீசன்விறல் வாட்டிவரை யுற்றதுண
ராதநிரம் பாமதியினான்
ஈசனுறை பட்டிசர மேத்தியெழு
வார்கள்வினை யேதுமிலவாய்
நாசமற வேண்டுதலி னண்ணலெளி
தாமமரர் விண்ணுலகமே. 8 |
உடையார்கள் - துறத்தலாகிய
உள்ளமுடைய மெய்யடியார்கள். (தங்கிய)
கொடிவீதி - கொடிகட்டியவீதியும். அழகாயதொருசீர் - அழகுடைய
பொருள்கள் எல்லாம் வந்து தொகும் சிறப்பையுடைய. இறைவன் உறை
பட்டிசரமே - தலைவன் தங்கியிருக்கும் பட்டீச்சரமே. ஏத்தி எழுவர் -
துதித்துத் துயில் எழுபவர். வினையேதும் இலராய் - வினைசிறிதும்
இல்லாதவராகி, நறவம் - தேன் ஒழுகுகின்ற. விரையாலும் -
வாசனைபொருந்திய மலர்களாலும். மொழியாலும் - தோத்திரங்களாலும்.
(வழிபாடுமறவாத) அவர் - சிவன்; உலகில் சிவகணத்தவரோடு உறைபவராவர்
என்பது குறிப்பெச்சம்.
8.
பொ-ரை: திக்குவிசயம் செய்வதில் விருப்பம் கொண்டுவரும்
இராவணன் தன் புய வலிமையினால் சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலை
மலையைப் பெயர்த்தெடுக்க, இழிபண்புடைய இராவணனின் வலிமையை
வாட்டியவராய், தன்னுடைய எல்லையும், தன்னுடைய நிலைமையும் பிறரால்
அறியப்படாது, பிறைச்சந்திரனை அணிந்த அச்சிவபெருமான் வீற்றிருந்
தருகின்ற திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலைத் தொழுது
வணங்குவார்களின் வினை முழுவதும் நீங்க, இனிப் பிறந்திறத்தலும் நீங்க
அவர்கள் சிவஞானம் பெறுதலால் விண்ணுலகத்தை எளிதில் அடைவர்.
கு-ரை:
நேசம் மிகு - திக்குவிசயத்தில் விருப்பம் மிகுந்த. தோள்
வலவன் ஆகி - புயவலிமையுடையவனாய். இறைவன் மலையை -
சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கைலாய மலையை. நீக்கியிடலும் -
தூக்கி அப்பால் இட முயன்ற அளவில். நீசன் விறல்வாட்டி -
இழிதகவினனாகிய இராவணனது வலிமையை வாட்டியவன். வரை -
தன்னுடைய எல்லையையும். உற்றது - தன்னுடைய நிலைமையையும்.
உணராத - பிறரால் அறியப்படாத. நிரம்பா மதியினான் - நிரம்பாத
(பிறைச்) சந்திரனை அணிந்தவன்
|