பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)74. திருத் தேவூர்937

3597. ஆறினொடு கீறுமதி யேறுசடை
       யேறனடை யார்நகர்கடான்
சீறுமவை வேறுபட நீறுசெய்த
     நீறனமை யாளுமரனூர்
வீறுமல ரூறுமது வேறிவளர்
     வாயவிளை கின்றகழனிச்
சேறுபடு செங்கயல் விளிப்பவிள
     வாளைவரு தேவூரதுவே.     6


ஏனஎயிறு - பன்றியின் கொம்பும். ஆமை - ஆமையோடும். இளநாகம் -
இளம் பாம்புகளும். வளர் - பொருந்துகின்ற. மார்பின் - மார்பையுடைய
(இமையோர் தலைவன்) ஊர் - (தேவர்கள் நாயகனாகிய சிவ பெருமானின்)
தலம். வான் அணவு சூதம் - ஆகாயத்தை அளாவிய மாமரங்களும். (வாழை,
மகிழ், மாதவி, பலா முதலிய மரங்களும்) நிலவி - தழைத்து. வார்தேன்
அமுது உண்டு - சொரிகின்ற தேனாகிய உணவை உண்டு. வரிவண்டு
இசைபாடும் வண்டுகள். மருள் - அந்தக் காலத்திற்குரியதல்லாத பண்ணை
(தேன் உண்ட மயக்கத்தால்) பாடி வரு(ம்) தேவூர் அதுவே. மருள் -
மருள்தல் தொழிலாகுபெயர். வளர் என்பது இங்குப் பொருந்திய என்னும்
பொருள் தந்து நின்றது. வண்டு மருள் பாடி என்பதனை “மாலை மருதம்
பண்ணிக் காலைக் கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி வரவெமர்
மறந்தனர்” என்னும் செய்தியிலும் காண்க. (புறநானூறு - 149.)

     6. பொ-ரை: சிவபெருமான் சடையிலே கங்கையோடு,
பிறைச்சந்திரனையும் அணிந்தவன். இடபவாகனம் ஏறியவன். கோபம்கொண்டு
தேவர்களைத் துன்புறுத்தும் பகையசுரர்களின் முப்புரங்களை எரித்துச்
சாம்பலாகும்படி செய்தவன். திருமேனியில் திருநீற்றைப் பூசியவன்.
நம்மையாட்கொள்ளும் அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், செழிப்பான
மலர்களிலிருந்து ஊறும் தேன் வயல்களில் பாய்ந்து சேறுபடுத்த,
கயல்மீன்கள் விளையாட அழைக்க இள வாளைமீன்கள் வருகின்ற
திருத்தேவூர் என்பதாகும்.

     கு - ரை: ஆறினொடு - கங்காநதியுடனே. கீறுமதி - பிறைச்
சந்திரனும், ஏறு - ஏறியுள்ள. சடை - சடையையுடைய, ஏறன் - இடப
வாகனத்தையுடையவனும், சீறும் அவை - (தேவர் முதலியோரை) சீறி
அழிப்பனவாகிய. அடையார் நகர்கள் - பகைவர்களின் முப்புரங்களையும்,
வேறுபட நீறுசெய்த - அழியும்படியாக எரித்து. நீறன் - திரு