பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)74. திருத் தேவூர்939

3599. ஓதமலி கின்றதெனி லங்கையரை
       யன்மலி புயங்கணெரியப்
பாதமலி கின்றவிர லொன்றினில்
     அடர்த்தபர மன்றனதிடம்
போதமலி கின்றமட வார்கணட
     மாடலொடு பொங்குமுரவம்
சேதமலி கின்றகரம் வென்றிதொழி
     லாளர்புரி தேவூரதுவே.               8

3600. வண்ணமுகி லன்னவெழி லண்ணலொடு
       சுண்ணமலி வண்ணமலர்மேல்
நண்ணவனு மெண்ணரிய விண்ணவர்கள்
     கண்ணவ னலங்கொள்பதிதான்


     8. பொ-ரை: கடல் அலைகள் மோதுகின்ற தென்னிலங்கை
மன்னனான இராவணனின் வலிமை மிகுந்த புயங்கள் நெரிபடத் தன்
காற்பெருவிரலை ஊன்றி அடர்த்த சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற
தலமாவது, மகிழ்ச்சி மிகுந்த பெண்கள் நடனமாடவும், முழவு ஒலிக்கவும்,
சேற்றில் பயில்கின்ற கையினால் உழவுத் தொழில் செய்து வறுமைப்
பிணியையும், பசிப்பிணியையும் ஓட்டி வெற்றிகாணும் வேளாளர்கள்
நிறைந்த திருத்தேவூர் ஆகும்.

     கு-ரை: ஓதம் மலிகின்ற - கடல் அலைகள் மோதுகின்ற. தென்
இலங்கை அரையன் - இராவணனது, வலி - வலிமை மிகுந்த. புயங்கள்
- தோள்கள். நெரிய - அரைபட. பாதம் மலிகின்ற - பாதத்தில் பொருந்திய.
விரல் ஒன்றினில் - ஒருவிரலால். அடர்ந்த - நெருங்கிய. (பரமன் தனது
இடம் ஆம் நகரில்) போதம் மலிகின்ற மடவார் - மகிழ்ச்சி மிகுந்த
பெண்கள். நடமாடல் ஒடு - நாட்டிய மாடுவதொடு, பொங்கும் முரவம் -
ஒத்து முழங்கும் முழவின் ஓசை ஒலிக்க (வயலுள்) சேதம் மலிகின்ற -
சேற்றில் பயில்கின்ற. கரம் - கையினால். தொழிலாளர் - உழவுத்
தொழிலினர். வெற்றி புரி - வறுமைப் பிணியையும், பசிப்பிணியையும் ஓட்டி
வெற்றிகாணும் (வேளாண்மை விளைவைச் செய்யும் தேவூரதுவே.)

     9. பொ-ரை: கருநிற மேகத்தையொத்த அழகிய திருமாலும்,
மகரந்தப்பொடி நிறைந்த தாமரைமலரில் வீற்றிருக்கும் பிரமனும்,