|
வண்ணவன
நுண்ணிடையி னெண்ணரிய
வன்னநடை யின்மொழியினார்
திண்ணவண மாளிகை செறிந்தவிசை
யாழ்மருவு தேவூரதுவே. 9 |
3601. |
பொச்சமமர் பிச்சைபயி லச்சமணு |
|
மெச்சமறு
போதியருமா
மொச்சைபயி லிச்சைகடி பிச்சன்மிகு
நச்சரவன் மொச்சநகர்தான்
மைச்சின்முகில் வைச்சபொழில்
* * * * * * * 10 |
அளவற்ற தேவர்களும்
இவர் நிலைமையை அறியும்வழி என்ன என்று
யோசிக்கும்படி நெருப்புப்பிழம்பாய் நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும்
தலம், அழகிய நிறமும், சிறிய இடையும், அன்ன நடையும், அளவற்ற
இனிய மொழிகளுமுடைய பெண்கள், உறுதியாக அமைந்த மாளிகைகளில்
யாழிசைக்க விளங்கும் திருத்தேவூர் ஆகும்.
கு
- ரை: வண்ணமுகில் அன்ன எழில் அண்ணலொடு -
கருநிறத்தையுடைய மேகத்தையொத்த அழகிய திருமாலுடன், கண்ணமலி
வண்ண - மகரந்தப் பொடிநிறையும் இயல்பையுடைய. மலர்மேல் -
தாமரைமேல். நண் அவனும் - தங்கும் பிரமனும். எண் அரிய - அளவற்ற.
விண்ணவர்கள் - ஏனைத் தேவர்களும். கண்ண - இவர் நிலைமையை
அறியும் வழி என் என்று யோசிக்குமாறு (வளர்ந்த) அனலம் - அக்கினி
வடிவமான சிவபெருமான். கொள் - இடமாகக் கொண்ட. பதி - தலம்.
வண்ணம் வனம் - நிறத்தின் அழகையும் (அழகிய நிறத்தையும்).
நுண்ணிடை - சிறிய இடையையும், அன்னம் நடை - அன்னம் போன்ற
நடையினையும் உடைய. எண்ணரிய - அளவற்ற. இன்மொழியினார் - இனிய
மொழிகளையுடைய பெண்கள். (தங்குகின்ற) திண்ணவணம் - உறுதியான
அமைவுடைய. மாளிகை - மாளிகைகளில், செறிந்த - மிகுந்த, யாழ் இசை -
யாழ் முதலிய கருவிகளில் ஓசையும். மருவு - பொருந்திய. (தேவூர் அதுவே.)
10.
பொ-ரை: பொய்யான துறவு வேடம்கொண்டு பிச்சையெடுக்கும்
சமணர்களும், புகழற்ற புத்தர்களும் கூறும் விருப்ப
|