பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)75. திருச்சண்பைநகர்943

75. திருச்சண்பைநகர்

பதிக வரலாறு:

     “ஞானசம்பந்தர் ஞாலத்து உயர் காழியரை மூல இலக்கியமாக எல்லாப்
பொருள்கோளும் முற்றப் பாடியவற்றுள் ஒன்று இத்திருப்பதிகம்.

திருவிராகம்
பண்: சாதாரி

ப.தொ.எண்:269   பதிக எண்: 11

திருச்சிற்றம்பலம்

3603. எந்தமது சிந்தைபிரி யாதபெரு
       மானென விறைஞ்சியிமையோர்
வந்துதுதி செய்யவளர் தூபமொடு
     தீபமலி வாய்மையதனால்
அந்தியமர் சந்திபல வர்ச்சனைகள்
     செய்யவமர் கின்றவழகன்
சந்தமலி குந்தளநன் மாதினொடு
     மேவுபதி சண்பைநகரே.           1


     1. பொ-ரை: ‘எங்கள் சிந்தையிலிருந்து நீங்காத தலைவனே!’ என்று
தேவர்கள் தொழுது போற்ற, நறுமணம் கமழும் தூபதீபம் முதலிய
உபசாரங்களோடு பூசாவிதிப்படி மாலை, முதலிய சந்தியா காலங்களில்
அர்ச்சனைகள் செய்ய வீற்றிருக்கும் அழகனான சிவபெருமான், நறுமணம்
கமழும் கூந்தலையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குகின்ற
தலம் திருச்சண்பைநகர் ஆகும்.

     கு-ரை: இமையோர் - தேவர்கள். எம் தமது - எம்முடைய. சிந்தை
பிரியாத - மனத்தினின்றும் நீங்காத. பெருமான் என - தலைவனென்று.
வந்து துதிசெய்ய - வந்து துதிக்கவும். வளர் - வாசனை மிகுந்த. தூபம்
ஒடு - தீபம் (ஒடு) - தூப தீபங்கள் முதலிய உபசாரங்களோடு. மலிவாய்மை
அதனால் - சிறந்த விதிப்படி, அந்தி - மாலை நேரங்களிலும். அமர் -
பொருந்திய. பலசந்தி - பலசந்தியா காலங்களிலும். அர்ச்சனைகள் செய்ய -
அருச்சிக்கவும், அமர்கின்ற - விரும்புகின்ற. அழகன் - சிவபெருமான்.
சந்தம்மலி - அழகுமிக்க,