3612. |
போதியர்கள்
பிண்டியர்கள் போதுவழு, |
|
வாதவகை
யுண்டுபலபொய்
ஓதியவர் கொண்டுசெய்வ தொன்றுமிலை
நன்றதுணர் வீருரைமினோ
ஆதியெமை யாளுடைய வரிவையொடு
பிரிவிலி யமர்ந்தபதிதான்
சாதிமணி தெண்டிரை கொணர்ந்துவயல்
புகவெறிகொள் சண்பைநகரே. 10 |
10.
பொ-ரை: அரசமரத்தை வணங்கும் புத்தர்களும், அசோக
மரத்தை வணங்கும் சமணர்களும் நேரம்தோறும் தவறாது உண்டு
பொய்ப்பொருளாம் நிலையற்ற உலகப்பொருள்களைப் பற்றிப் பேசுகின்ற,
மெய்ப்பொருளாம் இறைவனைப் பற்றிப் போசாத அவர்கள் உரைகளை
மேற்கொண்டு, செய்யத்தக்க பயனுடைய செயல்யாதுமில்லை. பயன்தரும்
நெறி எது என்று அறிபவர்களே! முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானும்,
எங்களை ஆட்கொள்ளும் உமா தேவியும் பிரியாது தங்கி இருக்கும்
தலமாவது, உயர்ந்த சாதி இரத்தினங்களைத் தெளிந்த கடலலைகள்
அடித்துக்கொண்டு வந்து வயல்களில் விழும்படி செய்கின்ற திருச்சண்பை
நகராகும். அதனைப் புகழ்ந்து பேசி அத்தலத்து இறைவனை
வழிபடுவீர்களாக.
கு-ரை:
போதியர்கள் - அரசமரத்தை வணங்கும் புத்தர்களும்.
பிண்டியர்கள் - அசோக மரத்தைப் பாராட்டும் சமணர்களும். போது
வழுவா வகை - நேரம் தோறும் தவறாத விதம், (உண்டு.) பல பொய்
ஓதியவர் - பல பொய்யுரைகளைச் சொல்லுபவர். கொண்டு - மேற்கொண்டு.
செய்வது - செய்யத்தகுந்த பயனுடைய செயல். ஒன்றுமிலை - சிறிதும்
இல்லை. நன்று அது - பயன்தரும் நெறி. உணர்வீர் - அறிவீர்கள்.
உரைமின் - புகழ்வீர்களாக. ஆதி - முதன்மைக் கடவுளும். எமை -
எங்கள். ஆளுடைய -ஆட்கொள்ளும். அரிவையொடும் - அம்பிகையொடும்.
பிரிவுஇலி - பிரியாதவனுமாகிய சிவபெருமான். அமர்ந்த பதி -
தங்கியிருக்குந் தலமாகிய. சாதி மணி - உயர்ந்த சாதி இரத்தினங்களை.
தெண்திரை கொணர்ந்து - தெளிவாகிய அலைகள் அடித்துக்கொண்டு வந்து.
வயல் புக - வயலில் போய் விழும்படி. எறிகொள் - எறிதலைக்கொண்ட.
சண்பை நகரே - திருச்சண்பை நகர் ஆகும்.
|