பக்கம் எண் :

984திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

  79. திருக்கோகரணம்

பதிக வரலாறு:

     திருக்காளத்திமலைத் தேனைப் போற்றிப் பருகி ஆர்ந்து பயலும்
நாளில், அருந்தமிழின் வழக்கு நிகழாத வடதிசை மேலும் குடக்கின்மேலும்
உள்ள சிவதலங்களில் சென்று இசைபாடும் செய்கை போலப்
பாடியருளியவற்றுள் கூற்றுதைத்தார் மகிழ்ந்த இக்கோகரணமும் ஒன்று.

திருவிராகம்
பண்: சாதாரி

ப.தொ.எண்:337   பதிக எண்:79

திருச்சிற்றம்பலம்

3646. என்றுமரி யானயல வர்க்கிய
       லிசைப்பொருள்க ளாகியெனதுள்
நன்றுமொளி யானொளிசி றந்தபொன்
     முடிக்கடவு ணண்ணுமிடமாம்
ஒன்றியம னத்தடியர் கூடியிமை
     யோர்பரவு நீடரவமார்
குன்றுகணெ ருங்கிவிரி தண்டலை
     மிடைந்துவளர் கோகரணமே.           1


     1. பொ-ரை: சிவபெருமான் அடியார் அல்லாதவர்க்கு எப்பொழுதும்
காண்டற்கு அரியவன். இயற்றமிழும், இசைத்தமிழும் ஆகி எனது
உள்ளத்தில் நன்கு ஒளியாகி வீற்றிருப்பவன். பொன்போன்று ஒளிரும்
சடைமுடியுடைய அக்கடவுள் வீற்றிருந்தருளும் இடமாவது, ஒன்றிய
மனமுடைய அடியவர்களுடன் தேவர்களும் கூடியிருந்து பரவுகின்ற
குன்றுகளும், சோலைகளும் விளங்கும் திருக்கோகரணம் என்னும்
திருத்தலமாகும்.

     கு-ரை: அயலவர்க்கு - அடியார் அல்லாதவர்க்கு. என்றும் அரியான்
- எப்பொழுதும் காண்டற்கு அரியவன். (என்றும்) - என் உள்ளத்தில். இயல்
இசைப் பொருள்களாகி - இயற்றமிழ் இசைத்தமிழ் நூல்களின் பயனாகி.
நன்றும் ஒளியான் - சிறிதும் ஒளியாமல் நன்கு