பக்கம் எண் :

990திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3653. வரைத்தல நெருக்கிய முருட்டிரு
       ணிறத்தவன வாய்களலற
விரற்றலை யுகிர்ச்சிறிது வைத்தபெரு
     மானினிது மேவுமிடமாம்
புரைத்தலை கெடுத்தமுனி வாணர்பொலி
     வாகிவினை தீரவதன்மேல்
குரைத்தலை கழற்பணிய வோமம்வில
     கும்புகைசெய் கோகரணமே.            8

3654. வில்லிமையி னால்விற லரக்கனுயிர்
       செற்றவனும் வேதமுதலோன்
இல்லையுள தென்றிகலி நேடவெரி
     யாகியுயர் கின்றபரனூர்


     8. பொ-ரை: முரட்டுத்தனமும், இருண்ட நிறமுமுடைய இராவணனின்
பத்து வாய்களும் அலறும்படி, தன் காற்பெருவிரலை ஊன்றி அவனைக்
கயிலைமலையின் கீழ் நெருக்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது,
முனிவர்களும், வேத வல்லுநர்களும் வினைதீர, ஒலிக்கின்ற கழலணிந்த
சிவபெருமானின் திருவடிகளைப் பணிந்து, அரநாமத்தினை ஓதி வேள்வி
புரிய அப்புகை பரவுகின்ற திருக்கோகரணம் ஆகும்.

     கு-ரை: வரைத்தலம் - கயிலை மலையில். முருடு - கடின
இயல்பையுடைய. இருள் நிறத்தவன் - இருண்ட நிறத்தையுடைய
இராவணனின். வாய்கள் - பத்து வாய்களும். அலற - அலறும்படி.
நெருக்கிய - (அவனை) அடர்க்கும் பொருட்டு. விரல்தலை - விரலின்
நுனியின். உகிர் - நகத்தை. சிறிது வைத்த - சிறிதே வைத்த, பெருமான்
இனிதுமேவும் இடமாம். புரைத்தலை கெடுத்த - குற்றப்படும் இடத்தை
ஒழித்த. முனிவாணர் பொலிவாகி - முனிவர்கள் விளங்கி. வினைதீர -
கன்மங்கள் ஒழிய. அதன்மேல் - அதன்பயனாக. குரைத்து அலை - ஒலித்து
அசையும் - கழல். பணிய - வணங்க. ஓமம் - வேள்வி. விலகும் - மேலே
கிளம்பும். புகைசெய் - புகைபரவுகின்ற கோகரணமே.

     9. பொ-ரை: வில்லாற்றலால் வலிமையுடைய அரக்கனான
இராவணனின் உயிரைப் போக்கிய திருமாலும், வேதத்தை ஓதும் பிரமனும்,
தம்முள் மாறுபட்டு இல்லையென்றும், உள்ளது என்றும் அறியமுடியாதவாறு
தேட, நெருப்புவடிவாகி ஓங்கி நின்ற சிவ