|
எல்லையில்
வரைத்தகடல் வட்டமு
மிறைஞ்சிநிறை வாசமுருவக்
கொல்லையி லிளங்குறவர் தம்மயிர்
புலர்த்திவளர் கோகரணமே. 9 |
3655. |
நேசமின்
மனச்சமணர் தேரர்க |
|
ணிரந்தமொழி பொய்களகல்வித்
தாசைகொண் மனத்தையடி யாரவர்
தமக்கருளு மங்கணனிடம் |
பெருமான் வீற்றிருந்தருளும்
ஊர், எல்லையாக அளவுபடுத்திய கடலால்
சூழப்பட்ட பூவுலகத்தோரும், தேவலோகத்தவரும் வணங்க, தினைப்
புனங்களில் இளங்குறவர்கள் நறுமணம் கமழும் கூந்தலை உலர்த்தும்
எழில்மிகுந்த திருக்கோகரணம் ஆகும்.
கு-ரை:
வில்லிமையினால் - வில்தொழிலால், விறல் அரக்கன். உயிர்
செற்றவனும் - வெற்றியையுடைய இராவணனது உயிரை அழித்த திருமாலும்.
வேத முதலோன் (உம்) - பிரமனும். இகலி இல்லையுளது என்று நேட -
தம்முள் மாறுபட்டு இல்லை என்றும் உள்ளது என்றும் அறிய முடியாதவாறு
தேட. எரியாகி - நெருப்பு வடிவமாகி. உயர்கின்ற - ஓங்கிய. பரன் -
மேலான கடவுளின். ஊர் - ஊராகும். எல்லையில் வரைத்த கடல் வட்டமும்
- எல்லையாக அளவு படுத்திய கடலாற் சூழப்பட்ட பூமியும்,
(தேவலோகமும்) இறைஞ்சி - வணங்கி. நிறை - நிறைகின்ற (கோகரணம்)
வாசம்உருவ - வாசனை (கூந்தலில் இருந்து) திக்குகளிற் சென்று பாய்ந்து
உருவ. கொல்லையில் - தினைப்புனங்களில். இளம்குறவர். தம் மயிர்
புலர்த்தி - தமது கூந்தலைக் காயவைத்து. வளர் - பெருகுகின்ற
கோகரணமே. குறவர் என்பது மயிர் புலர்த்தல் என்னுந் தொழிலினால்
ஆண்பாலையொழித்தது. இது, தொழிலிற் பிரிந்த ஆண் ஒழிமிகுசொல்.
இவர் வாழ்க்கைப்பட்டாரென்பது போல. "பெயரினும் தொழிலினும் பிரிபவை
யெல்லாம் மயங்கல்கூடா வழக்கு வழிப்பட்டன." (தொல். சொல்.50.)
10.
பொ-ரை: உள்ளன்பில்லாத சமணர்களும், புத்தர்களும் கூறும்
சொற்களைப் பொய்யென நீக்கி, தன்னிடத்து ஆசைகொள்ளும்படியான
மனத்தையுடைய அடியவர்களுக்கு அருளும் அழகிய கருணையையுடைய
சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது,
|