3659. |
மண்ணிழிசு
ரர்க்குவள மிக்கபதி |
|
மற்றுமுள
மன்னுயிர்களுக்
கெண்ணிழிவி லின்பநிகழ் வெய்தவெழி
லார்பொழி லிலங்கறுபதம்
பண்ணிழிவி லாதவகை பாடமட
மஞ்ஞைநட மாடவழகார்
விண்ணிழிவி மானமுடை விண்ணவர்பி
ரான்மருவு வீழிநகரே. 2 |
3660. |
செந்தமிழர்
தெய்வமறை நாவர்செழு |
|
நற்கலைதெ ரிந்தவவரோ
டந்தமில்கு ணத்தவர்க ளர்ச்சனைகள்
செய்யவமர் கின்றவரனூர் |
பொ-ரை:
தேவலோகத்திலிருந்து பூவுலகிற்கு வந்த தேவர்கட்கு
வளமிக்க பதி, மற்றுமுள்ள மன்னுயிர்கட்கு எண்ணற்ற இன்பங்களைத்
தரும்பதி, அழகிய சோலைகளில் வண்டுகள் பாட, இள மயில்கள் நடனமாட,
அழகிய தேவலோகத்திலிருந்து கொண்டு வரப்பட்டு வழிபடப்படும்
விமானமுடைய கோயிலில் தேவர்களின் தலைவனான சிவபெருமான்
வீற்றிருந்தருளும் சிறப்புடைய திரு வீழிமிழலை என்னும் தலமாகும்.
கு-ரை:
மண்இழி - (வானுலகினின்று) பூ உலகிற்கு வந்த. சுரர்க்கு -
தேவர்களுக்கும், வளம்மிக்கபதி - வளமிகுந்து அளிக்கும் தலமாகும்.
மற்றுமுள மன்னுயிர்களுக்கு. எண் (இல்) இழிவு இல் - அளவற்ற சிறந்த.
இன்பம் நிகழ்வு எய்த - இன்பம் உண்டாக. எழில் ஆர் பொழில் -
அழகுபொருந்திய சோலையில். இலங்கு - விளங்குகின்ற. அறுபதம் -
வண்டுகள், இழிவு இலாத வகை பண்பாட - குறைவு இல்லாதபடி
இசைப்பாடலைப் பாட. மடமஞ்ஞை நடமாட - இளம்மயில்கள் நடனம்
ஆடி. அழகார் - அழகுபொருந்திய. விண்ணிழி விமானம் உடை - தேவர்
உலகினின்றும் இறங்கிய கோயிலையுடைய, விண்ணவர்பிரான் -
தேவநாயராகிய
சிவபெருமான். மருவு - தங்கியுள்ள வீழிநகரே.
4.
பொ-ரை: பக்தியுடன் இனிய செந்தமிழ்ப் பாக்கள் பாடும்
அன்பர்களும், தெய்வத் தன்மையுடைய வேதம் ஓதும் நாவையுடைய
அந்தணர்களும், சிறந்த நற்பயன் தருவதாகிய கலைகளைத் தெரிந்த
|