பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)80. திருவீழிமிழலை997

கொந்தலர்பொ ழிற்பழன வேலிகுளிர்
     தண்புனல்வ ளம்பெருகவே
வெந்திறல்வி ளங்கிவளர் வேதியர்வி
     ரும்புபதி வீழிநகரே.                  4

3661. பூதபதி யாகியபு ராணமுனி
      புண்ணியநன் மாதைமருவிப்
பேதமதி லாதவகை பாகமிக
     வைத்தபெரு மானதிடமாம்
மாதவர்க ளன்னமறை யாளர்கள்
     வளர்த்தமலி வேள்வியதனால்
ஏதமதி லாதவகை யின்பமமர்
     கின்றவெழில் வீழிநகரே.               5


அறிஞர்களும், நற்குண, நற்செய்கையுடைய ஞானிகளும் அர்ச்சனைகள்
செய்ய, சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் ஊரானது, கொத்தாக
மலரும் பூக்கள் நிறைந்த சோலைகளும், வேலி சூழ்ந்த வயல்களும்,
குளிர்ந்த நீர்நிலைகளும் வளம்பெருகி விளங்க, வேள்வி இயற்றும் வேத
விற்பன்னர்கள் விரும்புகின்ற பதியாகிய திருவீழிமிழலையாகும்.

     கு-ரை: செந்தமிழர் - செந்தமிழ் மொழி பேசுவோர். தெய்வமறை
நாவர் - தெய்வத்தன்மை பொருந்திய வேதங்களை ஓதும் நாவையுடையவர்,
செழுநற்கலை தெரிந்தவர் அவரோடு - சிறந்த நற்பயன் தருவாகிய
கலைகளைத் தெரிந்தவர்களாகிய அவர்களுடன், அந்தமில் குணத்தவர்கள்
- அளவற்ற குணத்தையுடையவர்களான ஞானிகளும் (அர்ச்சனைகள் செய்ய)
அமர்கின்ற - விரும்பித் தங்குகின்ற. அரன் அமர்கின்ற ஊர் - சிவபெருமான்
எழுந்தருளிய ஊராகும். கொந்து அலர் பொழில் - கொத்துக்களில் மலர்கின்ற
சோலைகளும், வேலி - சூழ்ந்த. பழனம் - வயல்களில், குளிர் - குளிர்கின்ற.
தண் புனல்வளம் பெருக - தண்ணீரின் வளம்பெருக. வெம் - விரும்பத்தக்க.
திறல் விளங்கி - வலிமையால் விளங்கி. வளர் - மிகுகின்ற. வேதியர் விரும்பு
பதி - அந்தணர் விரும்பும் தலம் ஆகிய வீழி நகரே.

     5. பொ-ரை: நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என
விளங்குகின்ற ஐம்பூதங்கட்கும் பதியாகிய சிவபெருமான் பழமையான தவக்