பக்கம் எண் :

998திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3662. மண்ணின்மறை யோர்மருவு வைதிகமு
       மாதவமு மற்றுமுலகத்
தெண்ணில்பொரு ளாயவை படைத்தவிமை
     யோர்கள்பெரு மானதிடமாம்
நண்ணிவரு நாவலர்க ணாடொறும்
     வளர்க்கநிகழ் கின்றபுகழ்சேர்
விண்ணுலவு மாளிகை நெருங்கிவளர்
     நீள்புரிசை வீழிநகரே.                6


கோலம் பூண்டவர். அவர் புண்ணிய தேவியாகிய உமாதேவியைத் தம்
திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும்
இடமாவது மாதவர்களும், அந்தணர்களும் அழலோம்பி வளர்க்கும்
வேள்வியினால் பசி, பிணி, வறுமை, மழையின்மை முதலிய தீங்கு நேராமலும்,
உண்டி, நோயின்மை, செல்வம், பருவ மழை முதலிய நன்மை நிகழவும்,
மாந்தர் மகிழ்ச்சியடைகின்ற திருவீழிமிழலை ஆகும்.

     கு-ரை: பூதபதி ஆகிய - பூதங்களுக்குத் தலைவராகிய, புராண முனி
- பழமையாகிய தவக்கோலம் பூண்டவர். புண்ணியம் நல்மாதை -
அருளேயுருவமாகிய சிற்சத்தியை. பேதம் (அது) இலாதவகை - வேறுபாடு
இல்லாத விதம். மருவி - கலந்தும். மிக - வேறுபாடு நன்குதோன்ற. பாகம்
- இடப்பாகத்தில், வைத்த - வைத்தருளிய, பெருமானது இடமாம்.
இல்லத்திலிருந்து அழலோம்பும் அந்தணர்கள். தகைமையால் -
வனத்திற்சென்று தவம்புரியும் மாதவர்களைப் போன்றவர்கள், அவர்கள்
அழல் ஓம்புகின்றனர். அதனால் பசி, பிணி, வறுமை, மழையின்மை முதலிய
தீங்கு நேராமலும், உண்டி, நோயின்மை, செல்வம், பருவமழை முதலிய
நன்மை நிகழவும் மாந்தர் மகிழ்ச்சியடைகின்ற திருவீழிமிழலை என்பது பின்
இரண்டடியின் கருத்து.

     6. பொ-ரை: இப்பூவுலகில் அந்தணர் ஆற்றி வருகின்ற வைதிக
தருமங்களையும், மகா முனிவர் ஒழுகிவருகின்ற தவநெறிகளையும், மற்றும்
உலகியல் நெறி பற்றிய பல்வகை அறங்களையும் படைத்தருளிய சிவ
பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, நாடிவருகின்ற புலவர்கள் நாள்
தோறும்வளர்க்க வளர்ந்து வரும் புகழையுடையதும், வானளாவிய
மாளிகையின் நிறைந்து செல்வம் வளர்வதும், ஓங்கிய மதிலையுடையதுமான
திருவீழிமிழலை ஆகும்.