பக்கம் எண் :

102
 

பொருள்கொண்டும், நெல்லைக்கொண்டும் ஏரிபுதுக்கி உதவினாள் என்ற செய்தி கல்வெட்டால் அறியப்படுகிறது.

2. திருஅதிகைவீரட்டானம்

தென்னார்க்காடு மாவட்டம் கடலூர் தாலூகாவில் பண்ணுருட்டி தொடர்வண்டி நிலயத்திலிருந்து தென் மேற்கே 2. கி.மீ. தூரத்தில் உள்ளது.

தலச் சிறப்பு:

அப்பர் சுவாமிகளுக்குச் சூலைநோய் தீர்த்து அருள் புரிந்த திருத்தலம். அட்டவீரட்டங்களுள் இது முப்புர மெரித்த சங்கார மூர்த்தியை உடையது. இத்தலத்தில் கருடன், பிரமன், திருமால், பஞ்சபாண்டவர் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். திருஞானசம்பந்தருக்குத் திருநடனங் காட்டிய திருத்தலம். இறைவன் சுந்தரருக்குச் சித்தவட மடத்தில் திருவடி தீட்சை செய்தருளிய சிறப்புடையது.

இறைவர்: வீரட்டானேசுவரர்.
இறைவி: திரிபுரசுந்தரி.
தீர்த்தம்: கெடிலம், ஆலகங்கை, சக்கரதீர்த்தம்.
தலவிருட்சம்: சரக்கொன்றை.

கல்வெட்டு:

1இவ்வூர் வீரட்டானமுடையார் கோயிலில் கங்கபல்லவருள் நிருபதுங்கவர்மர், பல்லவர்களில் பரமேசுவரப்போத்தரையர், தெள்ளாறெறிந்த நந்திவர்மர், பிற்காலப் பல்லவர்களில் கோப்பெருஞ் சிங்கதேவர், என்பவர்கள் காலங்களிலும்; பிற்காலச் சோழமன்னர்களுள், இராஜகேசரிவர்மன், மதுரைகொண்ட கோப்பரகேசரிவர்மன், உத்தமசோழன், முதலாம் இராஜராஜசோழன், முதலாம் இராஜேந்திர சோழன், முதற் குலோத்துங்கசோழன், இரண்டாம் குலோத்துங்க


1. See the Annual Reports on South Indian Epigraphy for the year 1903 Numbers 28 - 60. year 1921 Numbers 358 - 419.

See also the South Indian Inscriptions Vol. VIII Numbers 301 - 306, Numbers 308 - 335.

See also the Epigraphia Indica Vol. VIII page 8.