மண்டபமும் மாளிகையும் வாழதிகை வீரட்டர்க் | கெண்டிசையு மேத்த வெடுத்தமைத்தான் - விண்டவர்கள் | நாள்வாங்கச் சேயிழையார் நாண்வாங்க நற்றடக்கை | வாள்வாங்குங் காலிங்கர்மன | 4 |
மன்னொளிசேர் நூற்றுக்கால் மண்டபத்தை மால்வரையால் | மன்னதிகை நாயகர்க்கு வந்தமைத்தான் - மன்ன | ரிசைகொடா தோட விகல்கொண்டாங் கெட்டுத் | திசைகொடாக் கூத்தன் தெரிந்து. | 5 |
மன்னுதிரு வீரட்டர் கோயில் மடைப்பள்ளி | தன்னைத் 1தடஞ்சிலையா லேசமைத்தான் - தென்னர் | குடமலைநா டேறிவந்து கொண்டவேற் கூத்தன் | கடமலைமால்2 யானையான கண்டு. | 6 |
அதிகை யரனுக் கருவரையாற் செய்தான் | மதுகை3நெடுங்குடைக்கீழ் மன்னர் - பதிக | ளுரியதிருச் சுற்று முடன்கவர்ந்த கூத்தன் | பெரியதிருச் சுற்றைப் பெயர்த்து. | 7 |
அருமறைமா தாவி னறக்காமக் கோட்டம் | திருவதிகைக் கேயமையச் செய்து - பெருவிபவங் | கண்டா னெதிர்ந்தா ரவியத்தன் கைவேலைக் | கொண்டானந் தொண்டையார் கோ. | 8 |
தென்னதிகை வீரட்டஞ் செம்பொனால் வேய்ந்திமையோர் | பொன்னுலகை மீளப் புதுக்கினான் - மன்னுணங்கு | முற்றத்தான் முற்றுநீர் வையம் பொதுக்கடிந்த | கொற்றத்தான் தொண்டையார் கோ. | 9 |
வானத் தருவின் வளஞ்சிறந்த நந்தவனம் | ஞானத் தொளியதிகை நாயகர்க்குத் - தானமைத்தான் | மாறுபடுத் தாருடலம் வன்பேய் பகிர்ந்துண்ண | கூறுபடுத் தான்கலிங்கர் கோ. | 10 |
1. தடஞ்சிலையால் - பெரிய கற்களால் 2. கடமலைமால் யானையான் -மதம் சொரியும் மலை போன்ற யானைப் படையினன் 3. மதுகை - வலிமை
|