பக்கம் எண் :

111
 

வெள்ளிக்கிழமைதோறும் இந்நாச்சியாரை வழிபடுதற்கு நிவந்தம் அளித்திருந்தார்.

இறைவர் திருமஞ்சனம் ஆடும் மண்டபத்திற்கு நெடிய நாயக்கன் ஸ்நபqநமண்டபம் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. அதன் வாசலில் நாடோறும் ஐம்பது விளக்கு ஏற்றி வைப்பதற்கும் மகா மண்டபத்தில் நூறு விளக்கு ஏற்றி வைப்பதற்கும் நரச நாயக்கர் திருமூர்ப்பற்றிலுள்ள அளங்கல் பாக்கத்தைக் கொடுத்திருந்தார்.

வீரட்டானமுடைய தம்பிரானார்மீது, கலம்பகம் ஒன்றைத் தொண்டைமண்டலத்துக் காலியூர்க் கோட்டத்து உத்தரமேரூராகிய இராஜேந்திரசோழ சதுர்வேதி மங்கலத்து மகிபாலகுலகாலச்சேரியில் வசித்து வந்த கௌண்டின்னிய கோத்திரத்து உத்தண்டவேலாயுத பாரதியென்பார் பாடியிருந்தார். அதன் பொருட்டு அவர்க்கு இரண்டு மா நன்செய் நிலமும், ஒருமா புன்செய் நிலமும் கொடுக்கப்பட்டிருந்தன. இதுபாடிய காலம் சகம் 1458, அதாவது கி. பி. 1536 ஆகும்.

இக்கோயில் கல்வெட்டுப் பாடல்கள்

பொன்மகர தோரணமும் பூணணியும் -1பட்டிகையுந்

தென்னதிகை நாயகர்க்குச் செய்தமைத்தான்- மன்னவர்கள்

தன்கடைவாய் நில்லாதார் 2தாள்வரைவாய் நின்றுணங்க

மின்3கடைவேற் காலிங்கர்வேந்து.

1


மின்னிலங்கு பொற்சதுக்க மேகடம்ப4 மென்றிவற்றைத்

தென்னதிகை நாயகர்க்குச் சேர்த்தினான் - தென்னவர்தந்

தோணோக்கும் வென்றி துரந்தே சுரநோக்க

வானோக்குங்காலிங்கர் மன்.

2


வில்லில் வெயிலனைய வீரட்டர் தந்திருநாள்

நல்லநெயீ ரைஞ்ஞூற்று நாழியால் - வல்லி

யுடனாடக் கண்டான்தன் னொன்னலர்க்குக் கண்க

ளிடனாடச் செல்கூத்த னீண்டு.

3


1. பட்டிகை - ஓர் ஆபரணம்,

2. தாள்வரை - மலையடிவாரம்; தி.12.பெரியபுராணம் திருமலை 8,

3. கடைவேல் - கடைந்தெடுத்த வேல்.

4. மேகடம்பம் - விதானம் (அ) மேற்கட்டி.