பொதுச் செய்திகள்: இத் திருவீரட்டானமுடையார் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சண்டேசுவரர் கலியுகச் சண்டேசுவரதேவர் என்னும் திருப்பெயரால் குறிக்கப்பெற்றுள்ளார். இத் திருக்கோயிலில் நாடகசாலை மண்டபம் ஒன்று இருந்ததை வாகன மண்டபத் தூணிலுள்ள உத்தமசோழ தேவரின் பதினான்காம் ஆண்டுக் கல்வெட்டு அறிவிக்கின்றது. அது பூங்குன்றம் அத்தமன் ஐயாறனாகிய கண்ட தோள் கண்டப் பையனால் கட்டப்பெற்றதாகும். இக் கோயிலுக்குப் பதியிலாரும் தேவரடியாரும் இருந்தனர். இக்கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில் முதலியார் 1நாடற்கரிய கூத்தரும், நாயகரும் ஏறி அருளினால், முற்பாடு திரை எடுத்தால் பதியிலார் ஆடவும், பிற்பாடு திரை எடுத்தால் தேவரடியார் ஆடவும் கடவதாக, கோமாறபன்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ விக்கிரம பாண்டியதேவர் திருவாய் மொழிந்தருளி யிருந்ததை அவருடைய ஆறாம் ஆண்டுக் கல்வெட்டு உணர்த்துகின்றது. இக்கோயிலில் நெய் அளக்கும் கருவிக்கு அதிகை நாயகன் நாழி என்றும், வாய்க்கால் ஒன்றுக்குத் திருவீரட்டானமுடையான் வாய்க்கால் என்றும் பெயர்கள் வைக்கப்பெற்றிருந்தன. இக்கோயிலில் முதலாம் இராஜேந்திரசோழதேவன் காலத்தில், அரியலூரில் வசித்து வந்த சாதேவன் என்பான் கிரிப்பாடி நாடப்பரை எழுந்தருளுவித்திருந்தான். இக்கோயிலில், படிகொடுத்தருளீச்சுர முடையாரை எழுந்தருளு வித்தவர், இராஜாதிராஜவளநாட்டுத் தியாகவல்லி நல்ல பெருமாள் தொண்டமானார் மகனார் மலையர் பெருமாள் தொண்டமானாரின் தமையனார் ஆவர். இச்செய்தி திரிபுவனச் சக்கிரவர்த்தி ஸ்ரீ வல்லபதேவ பாண்டியரின் முப்பத்து மூன்றாம் இராச்சிய ஆண்டில் குறிக்கப் பெற்றுள்ள கல்வெட்டால் புலப்படுகின்றது. இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சாமுண்டிநாச்சியார்க்குத் திருச்சாந்தின் பொருட்டு சம்புவராயன்காலத்தில் மூவாயிரம் குழி நிலம் விடப்பட்டிருந்தது. நரச நாயக்கர் என்பவர்
1. ‘நாடற்கரியதொர் கூத்தும் நன்குயர் வீரட்டம்’ என்னும் திருப்பாடற்பகுதி(பா.18) இத் திருமுறையிற் காண்க. - முத்து. சு.
|