பக்கம் எண் :

1363
 
1054.முழுத்தழன் மேனித் தவளப் பொடியன்

கனகக்குன்றத்

தெழிற் 1பெருஞ் சோதியை யெங்கள் பிரானை

யிகழ்திர்கண்டீர்

தொழப்படுந் தேவர் தொழப்படு வானைத்

தொழுதபின்னைத்

தொழப்படுந்தேவர்தம்மால் தொழுவிக்குந்தன்

றொண்டரையே.

5


நின்றும் அச் சோற்றுத் துறையர்க்கே பட்டியாய்ப் பணிசெய் மட நெஞ்சமே’. ‘நினையலொட்டாய்’ நினையலொட்டும் என்னும் இரண்டு நிலையிலும் வைத்து அதன் பொருளை நினைக. எப்போதும் நினையவொட்டாய் - எப்பொழுதிலும் (ஒருவேளையிலும்) உன்னை நினைதல் எனக்கு ஒட்டுமாறு செய்யாய். ஒரு வேளை கூட உன்னை நினைக்கச் செய்திலாய் என்றலும் பின்னுள்ள பகுதிக்குப் பொருந்தும். நீ நினையலொட்டாய். நினையல் அடியார் (அப்பர்) வினை. ஒட்டாமை கடவுள் செயல். நினையப் புகில் - நினைக்கலுற்றால், பின்னை - (முன்னை நினையவொட்டாது செய்ததன்றிப்) பின்னையும். அப்போதே - நினைக்கலுற்ற அப்பொழுதிலேயே. மறப்பித்து - மறக்கச்செய்து. பேர்த்து - பெயர்த்து; நினைப்பைப் பிறிதொன்றிற் பெயர்ந்து செல்ல வைத்து. ஒன்று - பிறிதொன்றனை. நாடுவித்தி - நாடுமாறு செய்கின்றாய். உன்னை நினையப்புகில், பிறிதொன்றனை நினையப் பண்ணுவாய் என்றவாறு. இத்திறத்தில், எப்போதும் உன்னை மறந்திட்டு, உனக்கு இனிதாக இருக்கும் என்னை ஒப்பார் (எவரேனும்) உளரோ? இறையவனே, யாரேனும் உளராயின், சொல்லு வாழி.

5. பொ-ரை: முழுமையான அனல்போன்ற சிவந்த திருமேனியில் வெள்ளிய திருநீற்றை அணிந்தவனாய், மேருமலை போன்ற அழகிய பெரிய ஒளிவடிவினனாகிய எங்கள் பெருமானை இகழ்கின்ற நீங்கள் இதனைத் தெரிந்து கொள்ளுங்கள். பொது மக்களால் தொழப்படும் சிறுதேவரால் தொழப்படும் எம்பெருமானைத் தொழுத பின்னர் அப் பெருமான் பிறரால் தொழப்படும் அச்சிறுதேவரைக் கொண்டும் அவர்களால் தன் அடியவர்களைத் தொழச் செய்வான்.


1. ‘பரஞ்சோதி’ என்றும் யாழ்ப்பாணம் சாமிநாதபண்டிதர் பதிப்பிலுளது.