பக்கம் எண் :

1364
 
1055.விண்ணகத் தான்மிக்க வேதத்து ளான்விரி

நீருடுத்த

மண்ணகத் தான்றிரு மாலகத் தான்மரு

வற்கினிய


கு-ரை: முழுத்தழல் மேனித் தவளப் பொடியன் - முழுத்தீப் போலும் திருமேனிமேல் வெண்ணீறுடையவன். தீ முழுமையும் ஒரு மேனியாயுற்றுத் திகழ்பவன் என்றவாறு. தவளம் - வெண்மை. பொடி - திருநீறு, ‘தவள வெண்ணீறு’ (தி.4 ப.113 பா.3) கனகக் குன்றத்து எழில் பெருஞ்சோதியை - பொன்மலைபோலும் எழுச்சியும் அழகும் உடைய மெய்ப்பேரொளியை. ‘பரஞ்சோதி’ என்று பண்டிதர் பதிப்பிலுளது. பழம்பதிப்பில் ‘பெருஞ்சோதி’ என்றே உளது. எங்கள் பிரானை - எங்களுக்குப் பிரியத்தைச் செய்பவனை, பிரியான் என்றதன் மரூஉவாக் கொண்டுரைத்தல் சிறந்தது. ‘அரியானை என்றெடுத்தே அடிய வருக்கு எளியானை அவர்தம் சிந்தை பிரியாத திருத்தாண்டகச் செந் தமிழ் பாடிப் பிறங்கு சோதி விரியா நின்றெவ்வுலகும் விளங்கிய பொன்னம்பலத்துமேவியாவும் புரியா நின்றவர் தம்மைப் பணிந்து தமிழாற் பின்னும் பாடல் செய்வார்’ (தி.12 திருநா. புராணம் 175). கிழவர் - கிழார், சிறுவர் - சிறார், மகவர் - மகார் என்பனபோல மருவியது. பிரான் என்பதுமாம். இகழ்திர் - இகழ்வீர். தொழுதல் = தேவர்களைப் பணிவோர் செயல். படுதல்:- அத் தேவர் வினை. தொழப்படுந் தேவர் தொழுதலும்; அத்தேவர் தொழப் படுதலும். “தொழப்படுந்தேவர்” என்றது தேவரது ஏற்றத்தைக் குறித்தது. ‘தொழப்படுந் தேவர் தொழப் படுவான்’ என்றது சிவபரத்துவத்தைக் குறித்தது. ‘தொழப்படுந் தேவர் தம்மால் தொழுவிக்கும் தொண்டரை’ என்றது திருத்தொண்டர் பெருமையைக் குறித்தது. ‘தொழுத பின்னை - தொழுதால். ‘கற்றபின் நிற்க அதற்குத் தக’ (குறள்) என்புழிப் பரிமேலழகர் உரைத்த துணர்க. தொழும்போதே உண்டாதலின் பின்னை என்றது காலப் பெயர் அன்று. தொழுவித்தல் - கடவுள் செயல், தொழுதல் - தொழப்படுந் தேவர் வினை, தொழுவிக்கப்பெறுவோர் தொண்டர். தொழப்படுந்தேவர்:- உருத்திரன், திருமால், நான்முகன், இந்திரன் முதலியோர். தொழப்படுவோர் அவராயின், அவரைத் தொழுவார் யார்? மண்ணோரும் விண்ணோரும் பாதலத்தோருமாவர். தொழப்படுவோரால் தொழப்படுவார் சிவபிரானும் சிவத் தொண்டரும்.

6. பொ-ரை: எம் நீலகண்டப் பெருமான் தேவருலகிலும், மேம்பட்ட வேதத்திலும், கடலால் சூழப்பட்ட இம்மண்ணுலகத்திலும், திரு