| பண்ணகத் தான்பத்தர் சித்தத்து ளான்பழ | | நாயடியேன் | | கண்ணகத் தான்மனத் தான்சென்னி யானெங்கறைக் | | கண்டனே. | | 6 |
1056. | பெருங்கடன் மூடிப் பிரளயங் கொண்டு | | பிரமனும்போய் | | இருங்கடன் மூடி யிறக்கு மிறந்தான் | | களேபரமும் | | கருங்கடல் வண்ணன் களேபர முங்கொண்டு | | கங்காளராய் | | வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை | | வாசிக்குமே. | | 7 |
மாலுடைய உள்ளத்திலும், பழகுதற்கு இனிய பண்களிலும், அடியவர் உள்ளத்தும், பழைய நாயைப் போன்ற இழிந்த அடியேனுடைய மனக் கண்களிலும் மனத்தும், தலைமீதும் எங்கும் கரந்து பரந்துள்ளான். கு-ரை: விண் அகத்தான் - விண்ணிடத்தவனும்; மிக்க வேதத்துளான் - மேலான மறைப் பொருளானவனும்; விரிநீர் உடுத்த மண்ணகத்தான் - பரந்த கடல் புடைசூழ்ந்த நிலத்திலுறைபவனும்; திருமால் அகத்தான் - திருமாலின் உள்ளத்திற் குடிகொண்டவனும்; மருவற்கு இனிய பண் அகத்தான் - பொருந்துதற்கு இனியவான பண்ணினிசை யானவனும்; பத்தர் - தொண்டர், சித்தத்துளான் - சிந்தையிலுள்ளவனும். பழ அடியேன்; நாயடியேன். அடியேனது கண், மனம், சென்னி, கண்ணிலுள்ளவனும், மனத்திலுள்ளவனும், சென்னியிலுள்ளவனும்; கறைக்கண்டனே - நஞ்சின் கறுப்பையுடைய (திருநீல) கண்டனே. இங்குக் காட்டத்தக்க ஒப்புமைப் பகுதிகள் அளவிலாதுள்ளன. ‘மனத்தகத்தான் ........ வாக்கினுள்ளான்’ சிரத்தின் மேலான் என்கண்ணுளானே! (தி.6 ப.8 பா.5.) வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானை ...... சிந்திக்கப்பெற்றேன் நானே’ 7. பொ-ரை: பெரிய கடல் இவ்வுலகைமூட ஊழிவெள்ளம் ஏற்படப் பிரமனுடைய சத்திய உலகத்தும் பெரிய கடல்நீர் பொங்கி அதனை மூழ்க்கப் பிரமனும் இறப்பான். அந்நிலையில் பிரமனுடைய இறந்த உடலையும் கரிய கடல்போன்ற நிறத்தினனாகிய திரு
|